சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

 

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 28ம் தேதி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் 4 மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளதால் கூடுதலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதி.

காய்கறி பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதி.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

உணவகங்கள் மற்றும் அடுமனைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி. மின்வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் அனைத்து மின் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி.

மின் வணிக சேவை நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம்

இனிப்பு மற்றும் கார வகை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம்

குழந்தைகள், சிறார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர் ,மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ,ஆதரவற்றவர்கள் பெண்கள், விதவைகள், அவருக்கான இல்லங்கள் மற்றும் இவை தொடர்புடைய போக்குவரத்து இ-பதிவு இல்லாமல் அனுமதிக்கப்படும்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

சிறார்களுக்கான கண்காணிப்பு பராமரிப்பு சீர்திருத்த இல்லங்களில் பணிபுரிவோர் இ பதவில்லாமல் அனுமதி

அனைத்து வகையான கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும்

அனைத்து அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி

சார்பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதி

அனைத்து தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் அனுமதி

ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கும்

இதர தொழிற்சாலைகளும் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

மின் பணியாளர் , பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கூறுபவர் வீடுகளுக்கு சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6 மணி முதல் 7 மணி வரை இ பதிவுடன் உடன் அனுமதி .

மின் பொருட்கள், பல்புகள், கேபிள்கள் ,சுவிட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதி

மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதி

ஹார்டுவேர் கடைகள் காலை 9 மணி முதல் 7 மணி வரை இயங்கும்

வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்கலாம்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

கல்வி புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை இயங்கலாம்

வாகனப் பழுது பார்க்கும் மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்படலாம்

வாகனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அது கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்

காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதி

கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், பாத்திரக் கடைகள் ,பேன்ஸி ,அழகு சாதனப் பொருட்கள், போட்டோ வீடியோ கடைகள், சலவை கடைகள், தையல் கடைகள், அச்சகங்கள் ,ஜெராக்ஸ் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்படலாம்.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

தேநீர் கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி.

மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை மிக்ஸி கிரைண்டர் தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை, பழுது நீக்கும் கடைகள், செல்பேசி மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சாலையோர உணவகம் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை அனுமதிக்கப்படும்

கணினி ,வன்பொருட்கள் ,மென்பொருட்கள் ,மின்னணு சாதனங்களில் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்

பள்ளி ,கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகள் அனுமதி .

திரைப்பட மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் 100 நபர்கள் மட்டுமே பணி புரியும் வகையில் நடத்த அனுமதிக்கப்படும்

திரையரங்குகளில் தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதிபெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி.