• August
    25
    Sunday

Main Area

Main



இளநீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

இளநீர்
இளநீர்
Loading...

தாகமாக இருக்கிறதென்று ஐஸ் வாட்டர் குடிப்பதை விட, ஆயிரம் மடங்குக்கும் அதிகமான பலன்கள் இளநீரில் இருக்கிறது. இவ்வளவு ஏன்? நீங்கள் அருந்தும் பெயர் தெரியாத பழச்சாறுகளில் ஆரம்பித்து, மாதுளை, சாத்துக்குடி பழங்களின் சாறுகளை விட இளநீரில் அதிக சத்துக்கள் இருக்கிறது. 

coconut water

வெறும் தாகத்தைத் தணிப்பதற்காக மட்டுமே இளநீர் குடிக்காமல் அதன் பயனையும் அறிந்து குடித்து வாருங்கள். இளநீர் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமடைகிறது. நாளடைவில், கல்லீரல் நன்றாக இயங்குவதற்கும் இளநீர் உதவுகிறது. 

பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கு இளநீர் தான் சிறந்த மருந்து. கூடவே பத்து கிராம் அளவு வெந்தயத்தையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். பேதி, சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. 

coconut water

சிறுநீரகக்கல், சிறுநீர்க்குழாய் பாதிப்பு போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் அருமருந்தே இளநீர் மட்டும் தான். டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது  இளநீரை தாராளமாக குடிக்க வேண்டும்.

இளநீர்,வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். வயிற்றுப் பொருமல், உப்புசம், குமட்டல், பசியின்மை ஆகியவற்றைச் சரிபடுத்தும். அடிக்கடி வாந்தி, பேதியால் பாதிக்கப்படும் நபர்கள், இளநீரைச் சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துக்களை உடனடியாக பெறலாம். சருமத்தின் ஈரப்பதத்தை நீண்ட நேரத்துக்கு தக்க வைத்து, சருமத்தைப் பாதுகாக்கும் சக்தி இளநீருக்கு உண்டு. 

coconut water

இளநீரை பருகினால் வயிறு நிறைந்து போகும். இதனால் அதிகமாக தேவையில்லாத உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவுகிறது. இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதனாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது. 

இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோய்எதிர்ப்பு சக்தி அடங்கியிருப்பதால், வைரஸ் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.இளநீரில் சுண்ணாம்புச்சத்து நிறைந்திருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் உதவுகிறது. கடைகளில் கண்ட கண்ட கலரில் இருக்கும் குளிர்பானங்களைத் தவிர்த்து இனி இளநீர் குடிக்க துவங்குங்கள்.

2018 TopTamilNews. All rights reserved.