• August
    19
    Monday

Main Area

Main



யோகா செய்வதால் இத்தனை நன்மைகளா? அப்ப ஆரம்பிச்சுட வேண்டியது தான்!

யோகா
யோகா
Loading...

இந்தியாவில் தோன்றிய பல உன்னத கலைகளில் ஒரு கலையாகும். யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து மதத்தில் காணப்படுகின்றன. உடலையும், உள்ளத்தையும் நலத்துடன் வைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் கலை.  இன்றைய அவசர உலகில் அனைவரும் உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டோம். அதனால் பல வியாதிகளை சுமந்து வாழ்ந்து வருகிறோம். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல் காலங்கடந்து யோகா செய்வதால் பலன் கிடைக்காது.

yoga

யோகா உடம்பையும் மனதையும் சீராக, கட்டுக்கோப்பாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களில் அனைவருக்குமே உடல் முழுவதும் கொழுப்பு சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. சிலருக்கு இடுப்பில், சிலருக்கு தொடையில், சிலருக்கு முதுகில், சிலருக்கு அடிவயிற்றில், சிலருக்கு மேல் வயிற்றில், சிலருக்கு மார்பில் பருமன் வெவ்வேறு வடிவில் இருக்கும். குறிப்பிட்ட யோகாசனத்தை மட்டும் செய்தால் போதும். உடல் முழுவதும் ஒரே மாதிரியாக சீராகும். மேலும் மனதும் புத்துணர்ச்சி பெறும்
5000 ஆண்டுகளுக்கும் மேலான, இக்கலையை ஆயிரக்கணக்கான சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் குறிப்பாக மச்சேந்திரநாதர், கோரக்கநாதர், திருமூலர் போன்றோர் வாழ்நாள் முழுவதும் பயிற்சி பெற்று கண்டுபிடித்துள்ளனர்.

yoga

முறையாக யோகா ஆசனம் பயிற்சி செய்வதால் பல நோய்களை குணப்படுத்த முடியும். நோய் வராமல் தடுக்க இயலும். வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும். நேரடியாக தகுதிபெற்ற யோகா நிபுணரின் கீழ்தான் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ’டிவி’ பார்த்து செய்தால் பக்கவிளைவுகள் வர வாய்ப்பு உள்ளது. முறையாக செய்வதன் மூலம் பல அற்புத பலன்களை பெற இயலும்.
யோகப் பயிற்சியின் மூலம் உடற்தகுதியினை உடல் நலத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய செய்கிறது. உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மரணத்தை தள்ளிப்போடுகிறது. சர்க்கரை நோய், ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது.

yoga

இளவயதிலேயே முறையாக பயிற்சி செய்தால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகம், கல்லீரல் நோய்களை வராமல் தவிர்க்கலாம். ரத்தஓட்டத்தை சீராக வைக்க உதவும். எலும்புகள், தசை நார்களை வலிமையாக, உறுதியாக வைக்க உதவும். முன்னால் குனியும் ஆசனங்கள் மூலம் மூளைக்கு முறையாக ரத்தஓட்டத்ததை செலுத்தி, பிராணவாயு அதிகமாக உட்செலுத்தி நீண்ட ஆயுளையும், ஞாபக சக்தியையும் பெருக்க முடியும்.
உளவியல் ரீதியாக மனஅழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு வளர்க்க முடியும். கவனச் சிதறலில் இருந்து விடுபட்டு, மனஒருமைப்பாட்டை வளர்க்க முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மனஇறுக்கம், அபரிமித உணர்வுகள், வன்முறை உணர்வுகள், பயம் போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.

yoga

மது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், பாஸ்ட்புட் வகைகளை விட்டுவிட வேண்டும். உணவு உண்டபின் ஆசனம் செய்யக்கூடாது. தூங்கி எழுந்தபின் வெறும் வயிற்றில் அதிகாலையில் பயிற்சி செய்ய வேண்டும். தினமும் அரைமணிநேரம் தவறாமல் யோகா பயிற்சி செய்வது நல்லது.
 ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள் இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள் நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் ஓவ்வொரு ஆசனங்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

2018 TopTamilNews. All rights reserved.