“வெட் கிரைண்டர் விலை 20% உயர்வு” – உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

 

“வெட் கிரைண்டர் விலை 20% உயர்வு” – உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

கோவை

மூல பொருட்கள் விலை உயர்வு காரணமாக, வெட் கிரைண்டர்களின் விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக, வெட் கிரைண்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் சவுந்தர் குமார், பொதுமுடக்கத்திற்கு பின் வெட் கிரைண்டர் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை 20 முதல் 200 சதவீதம் வரை அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார்.

“வெட் கிரைண்டர் விலை 20% உயர்வு” – உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

மேலும், வெட் கிரைண்டர் உற்பத்திக்கு தேவைப்படும் ஏபெஸ் எனப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், காப்பர் வயர் மற்றும் இரும்பின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறிய அவர், இதனால் ரூ.2,500 முதல் ரூ..1 லட்சம் வரை விற்பனையாகும் கிரைண்டர்கள், 500 ரூபாய் முதல் 20 ஆயிரம் வரை விலை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், அவ்வாறு செய்யாவிட்டால் தங்களால் தொழில் செய்ய முடியாது என்றும் கூறினார்.