காஷ்மீர் டி.டி.சி. 2ம் கட்ட தேர்தலில் 49 சதவீத வாக்குகள் பதிவு.. 70 ஆண்டுகளில் முதல் முறையாக வாக்களித்த அகதிகள்

காஷ்மீர் டி.டி.சி. 2ம் கட்ட தேர்தலில் 49 சதவீத வாக்குகள் பதிவு.. 70 ஆண்டுகளில் முதல் முறையாக வாக்களித்த அகதிகள்

ஜம்மு காஷ்மீரில் நேற்று நடந்த 2ம் கட்ட மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் 48.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தற்போது மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 28ம் தேதியன்று நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 51.72 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த சூழ்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நேற்றும் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

காஷ்மீர் டி.டி.சி. 2ம் கட்ட தேர்தலில் 49 சதவீத வாக்குகள் பதிவு.. 70 ஆண்டுகளில் முதல் முறையாக வாக்களித்த அகதிகள்
வாக்களித்த அகதிகள்

நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து சென்றனர். தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, நேற்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கவுன்சிலின் 2ம் கட்ட தேர்தலில் 48.62 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது முதல் கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்கு சதவீதத்தை காட்டிலும் குறைவாகும்.

காஷ்மீர் டி.டி.சி. 2ம் கட்ட தேர்தலில் 49 சதவீத வாக்குகள் பதிவு.. 70 ஆண்டுகளில் முதல் முறையாக வாக்களித்த அகதிகள்
ஆர்வமாக வந்து வாக்களித்த காஷ்மீர் மக்கள்

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் முதல் முறையாக மேற்கு பாகிஸ்தானி அகதிகள் வாக்களித்துள்ளனர். இது குறித்து ஜம்முவின் பாசி குர்த் கிராமத்தில் வசிக்கும் மேற்கு பாகிஸ்தானி அகதி ரமேஷ் கூறுகையில், கடந்த 70 ஆண்டுகளாக நாங்கள் இங்கு வாழ்ந்து வருகிறோம். ஆனால் இப்போதுதான் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் மற்றும் அரசுக்கு நன்றி. முன்னதாக நாங்கள் அரசின் நலத்திட்டங்களின் பலன்களை கூட பெறவில்லை. நாங்கள் பாகிஸ்தானி என்று அழைக்கப்பட்டோம். என் அப்பா பாகிஸ்தானிலிருந்து இங்கு வந்தார் என்று தெரிவித்தார்.