மேற்கு வங்கத்தில் தெய்வங்களுக்கு வெள்ளியில் மாஸ்க்… கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சி

மேற்கு வங்கத்தில் தெய்வங்களுக்கு வெள்ளியில் மாஸ்க்… கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சி

கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை நடத்தும் ஒரு குழு சாமி சிலைகளுக்கு வெள்ளியிலான மாஸ்க் அணிவித்துள்ளது.

நம் நாட்டை முடக்கி போட்ட கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. இதனால் பலரும் கொரோனா வைரஸ் குறித்து கவலைப்படாமல் பலரும் அலட்சியமாக மாஸ்க் அணியாமல் வெளியே வர தொடங்கி விட்டனர். கொரோனா வைரஸ் முற்றிலும் அழியவில்லை என்பதை அவர்கள் உணரவில்லை, மேலும் பண்டிகை காலத்தில் கொரோனா வைரஸ் எதிராக முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை (மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவைகள்) நாம் மேற்கொள்ளவில்லை என்றால் கொரோனா வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது.

மேற்கு வங்கத்தில் தெய்வங்களுக்கு வெள்ளியில் மாஸ்க்… கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சி
தெய்வ சிலைகளுக்கு வெள்ளியில் மாஸ்க்

கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் துர்கா பூஜைக்கு பெயர் பெற்ற மேற்கு வங்கத்தில் ஒரு துர்கா பூஜை கமிட்டி இந்த ஆண்டு வித்தியாசமான கருப்பொருளுடன் பூஜையை நடத்த முடிவு செய்தனர். கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தெய்வ சிலைகளுக்கு வெள்ளியிலான மாஸ்க் அணிய முடிவு செய்தனர்.

மேற்கு வங்கத்தில் தெய்வங்களுக்கு வெள்ளியில் மாஸ்க்… கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வித்தியாசமான முயற்சி
மாஸ்க அணிந்து வெளியே செல்லும் மக்கள்

மேற்கு வங்கம் மாநிலம் பிர்பம் மாவட்டத்தை சேர்ந்த ஜோதி சுபாஸ் கோஷ்டி கமிட்டி கடந்த 33 ஆண்டுகளாக தவறாமல் துர்கா பூஜையை நடத்தி வருகிறது. அந்த கமிட்டி இந்த ஆண்டு துர்கா பூஜையை வித்தியாசமான கருப்பொருளுடன் நடத்தி முடிவு செய்தது. இதனையடுத்து கோவிட்-19 தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தெய்வ சிலைகளை வெள்ளியிலான மாஸ்க் அணிவித்து அலங்கரிக்க முடிவு செய்தனர். இது குறித்து அந்த கமிட்டியின் செயலாளர் தேவஷிஷ் சஹா கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக துர்கா, சரஸ்வதி, லெட்சுமி மற்றும் கார்த்திக் ஆகிய தெய்வங்களின் சிலைகைள வெள்ளி முககவசங்களால் அலங்கரிக்க பூஜை குழு முடிவு செய்துள்ளது என தெரிவித்தார்.