மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி தொடரும்… அசுர பலம் பெறும் பா.ஜ.க… தேற்பிறை நிலவாக காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி

மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி தொடரும்… அசுர பலம் பெறும் பா.ஜ.க… தேற்பிறை நிலவாக காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வார், பா.ஜ.க. கணிசமான தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

மேற்கு வங்க தேர்தலை முன்னிட்டு டைம்ஸ் நவ்-சி வோட்டர்ஸ் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை மேற்கொண்டன. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டன. இதன்படி, மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சியை தக்கவைத்து கொள்வார். இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மொத்தம் 160 இடங்களை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2016 சட்டப்பேரவை தேர்தலை காட்டிலும் 51 இடங்கள் குறைவாகும்.

மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி தொடரும்… அசுர பலம் பெறும் பா.ஜ.க… தேற்பிறை நிலவாக காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி
பா.ஜ.க.

அதேசமயம் 2016 சட்டப்பேரவை தேர்தலில் 3 இடங்களை கைப்பற்றி இருந்த பா.ஜ.க. இந்த தேர்தலில் தனி முத்திரை பதிக்கும் என்று கருத்து கணிப்பு அடித்து சொல்கிறது. 2021 மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 112 இடங்களில் வெற்றிக்கனியை பறிக்க வாய்ப்புள்ளது. இது கடந்த தேர்தலை காட்டிலும் 109 இடங்கள் அதிகமாகும்.

மேற்கு வங்கத்தில் மம்தா ஆட்சி தொடரும்… அசுர பலம் பெறும் பா.ஜ.க… தேற்பிறை நிலவாக காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி
காங்கிரஸ்

தற்போதைய மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணிக்கு ஒரு கசப்பான அனுபவமாகத்தான் இருக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு கூறுகிறது. 2016 தேர்தலில் 76 இடங்களை வென்ற இந்த கூட்டணி வரும் தேர்தலில் 22 இடங்களை மட்டுமே கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.