மோதலை கைவிடுங்க.. நாம சேர்ந்து மக்களுக்கு பணியாற்றுவோம்.. மம்தாவுக்கு சமாதான கொடி காட்டும் கவர்னர்

மோதலை கைவிடுங்க.. நாம சேர்ந்து மக்களுக்கு பணியாற்றுவோம்.. மம்தாவுக்கு சமாதான கொடி காட்டும் கவர்னர்

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கவர்னராக இருப்பவர் ஜகதீப் தங்கர். முதல்வர் மம்தாவுக்கும், கவர்னர் ஜகதீப் தங்கருக்கும் அடிக்கடி முட்டல் மோதல் ஏற்பட்டு வருகிறது. இருவரும் வெளிப்படையாக ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மம்தாவுக்கு சமாதான கொடி காட்டியுள்ளார் கவர்னர் ஜகதீப் தங்கர்.

மோதலை கைவிடுங்க.. நாம சேர்ந்து மக்களுக்கு பணியாற்றுவோம்.. மம்தாவுக்கு சமாதான கொடி காட்டும் கவர்னர்

மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கர் தனது டிவிட்டரில், கவர்னர் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான மோதலை கைவிடுமாறு மம்தா அலுவலகத்தை வலியுறுத்துகிறேன். அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றி மட்டுமே நாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணியாற்ற முடியும். பொதுமக்கள் எதிர்கொள்ளும் சொல்லப்படாத கஷ்டங்களை ஒன்றாக பணியாற்றி தணிப்போம்.

மோதலை கைவிடுங்க.. நாம சேர்ந்து மக்களுக்கு பணியாற்றுவோம்.. மம்தாவுக்கு சமாதான கொடி காட்டும் கவர்னர்

துன்பப்படும் மக்களுக்காக ஒற்றுமையுடன் பணியாற்ற எப்போதும் தயாராக இருங்கள். இவ்வாறு அதில் பதிவு செய்து இருந்தார். மேற்கு வங்க கவர்னரின் இந்த டிவிட்டுக்கு முதல்வர் மம்தா தரப்பு எந்தவித பதில் கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் கவர்னர் ஜகதீப் தங்கர் மம்தா அரசுடான மோதலை தணிக்கும் நடவடிக்கையில் இறங்கி இருப்பது அரசு எந்திரம் சிறப்பாக செயல்படுவதுதற்கான நல்ல தொடக்கமாகவே தென்படுகிறது.