மேற்கு வங்கத்தில் அல் கொய்தா போன்ற தீவிரவாத குழுக்கள் தடம் பதிக்கின்றன.. கவர்னர் அதிர்ச்சி தகவல்

மேற்கு வங்கத்தில் அல் கொய்தா போன்ற தீவிரவாத குழுக்கள் தடம் பதிக்கின்றன.. கவர்னர் அதிர்ச்சி தகவல்

மேற்கு வங்கத்தில் அல் கொய்தா போன்ற தீவிரவாத குழுக்கள் தடம் பதிக்கின்றன என அம்மாநில கவர்னர் ஜகதீப் தங்கர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஜகதீப் தங்கருக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவுகிறது. டெல்லிக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள கவர்னர் ஜகதீப் தங்கர் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்தது. அந்த சந்திப்பு தொடர்பான செய்திகள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

மேற்கு வங்கத்தில் அல் கொய்தா போன்ற தீவிரவாத குழுக்கள் தடம் பதிக்கின்றன.. கவர்னர் அதிர்ச்சி தகவல்
கவர்னர் ஜகதீப் தங்கர்

இந்நிலையில் மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மூத்த அதிகாரிகளால் தங்களது அதிகாரத்தை கைவிட்டு விட்டு அப்படி இருக்க முடியும் என்று என்னால் ஒரு போதும் நினைத்து பார்க்க முடியவில்லை. எங்களிடம் ஒரு மாநில பாதுகாப்பு ஆலோசகர் இருக்கிறார். அவர் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., அவர் என்ன செய்வார்? அரசியல் செயல்களை செய்வதற்கு மட்டுமே இருக்கிறாரா?

மேற்கு வங்கத்தில் அல் கொய்தா போன்ற தீவிரவாத குழுக்கள் தடம் பதிக்கின்றன.. கவர்னர் அதிர்ச்சி தகவல்
முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் அல் கொய்தா தடம் பதிக்கிறது. மக்கள் கைது செய்யப்படுகிறார்கள், எங்க மாநிலத்தில் சட்டவிரோத வெடிகுண்டு தயாரித்தல் உள்ளது. மேலும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் குண்டுகள் பறக்கின்றன. ஆம்புலன்ஸில் கூட கொண்டு செல்லப்படுகின்றன. எனவே இந்த மக்கள் (அதிகாரிகள்) என்ன செய்கிறார்கள்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.