மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியாக கல்வி கட்டுப்படுத்தப்படுகிறது… மம்தா அரசு மீது கவர்னர் ஜகதீப் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியாக கல்வி கட்டுப்படுத்தப்படுகிறது… மம்தா அரசு மீது கவர்னர் ஜகதீப் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வர் ஜகதீப் தங்கருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மாநில அரசின் குறைகளை கவர்னர் ஜகதீப் தங்கர் வெளிப்படையாக கூறுவது மம்தாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியாக கல்வி கட்டுப்படுத்தப்படுகிறது… மம்தா அரசு மீது கவர்னர் ஜகதீப் குற்றச்சாட்டு

இந்த சூழ்நிலையில், கோவிட்-19 லாக்டவுன் காலத்தில் மாணவர்கள் எதிர்கொண்ட பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக வீடியோ கான்பரன்சிங் வாயிலான சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அரசு உதவி பெறும் 20 பல்கலைகழகங்களின் துணை வேந்தர்களுக்கு கவர்னர் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் அரசு, கவர்னருடான வீடியோ கான்பரன்சிங் சந்திப்புக்கு துணைவேந்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவர்கள் கவர்னருடான வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொள்ளவில்லை. இவ்வளவுக்கும் மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கவர்னர்தான் வேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் அரசியல் ரீதியாக கல்வி கட்டுப்படுத்தப்படுகிறது… மம்தா அரசு மீது கவர்னர் ஜகதீப் குற்றச்சாட்டு

மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கையை கவர்னர் ஜகதீப் தங்கர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஒரு தலைமுறையிடம் இருந்து அடுத்த தலைமுறைக்கு செல்வதால் கல்வி என்பது சமூகத்தின் ஆன்மா. துரதிருஷ்டவசமாக அது நமது மாநிலத்தில் அரசியல் ரீதியாக கூண்டில் அடைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகிறது. கல்வி மீது அரசியல் பிடி இறுகுகிறது. இது மாணவர்கள், கல்வி சூழ்நிலை மற்றும் சமூகத்தை பெரிய அளவில் பாதிக்கும் என தெரிவித்தார்.