அரசியல் பணிகளை செய்யும் காவல்துறையினர்.. மம்தா பானர்ஜி அரசு மீது கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு..

அரசியல் பணிகளை செய்யும் காவல்துறையினர்.. மம்தா பானர்ஜி அரசு மீது கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு..

மேற்கு வங்கத்தில் முடிவு எடுப்பவர்களின் கட்டாயத்தால் காவல்துறையினர் அரசியல் பணிகளை செய்கின்றனர் என மம்தா பானர்ஜி அரசு மீது கவர்னர் ஜகதீப் தங்கர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஜகதீப் தங்கருக்கும் அடிக்கடி வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் குற்றச்சாட்டுக்களை கவர்னர் ஜெகதீப் தங்கர் வெளிப்படையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் மேற்கு வங்க அரசுக்கும் கவர்னருக்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லை.

அரசியல் பணிகளை செய்யும் காவல்துறையினர்.. மம்தா பானர்ஜி அரசு மீது கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு..
மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கர்

மேற்கு வங்க கவர்னர் ஜகதீப் தங்கர் நேற்று செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மாநிலத்தில் ஜனநாயகத்தின் அச்சுறுத்தலை என்னால் பார்க்க முடியாது. மனித உரிமைகள் மீறலை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. காவல்துறையின் பணி கவலைக்குரியது. பொதுவான போலீஸ்காரர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அவர்களுக்கு மேலே முடிவெடுப்பவர்கள் அவர்களை அரசியல் பணிகளை செய்ய வைக்கிறார்கள்.

அரசியல் பணிகளை செய்யும் காவல்துறையினர்.. மம்தா பானர்ஜி அரசு மீது கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டு..
மேற்கு வங்க் போலீஸ்

அரசு பணியாளர்களாக, நிர்வாகமும் மற்றும் போலீசும் அரசியல் பணிகளை செய்ய முடியாது. சட்டம் அனைத்துக்கும் மேலானது. கவர்னராக சட்டத்தை பாதுகாப்பது எனது கடமை என தெரிவித்தார். போலீஸ்காரர்கள் அரசியல் பணி செய்ய வைக்கப்படுகிறார்கள் என்ற மம்தா அரசின் மீதான கவர்னர் ஜகதீப் தங்கரின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.