திரிணாமுல் காங்கிரஸ் போல பா.ஜ.க. கிடையாது… அது ஒரு மேற்குவங்க கட்சி அல்ல… மம்தா பானர்ஜி ஆவேசம்

 

திரிணாமுல் காங்கிரஸ் போல பா.ஜ.க. கிடையாது… அது ஒரு மேற்குவங்க கட்சி அல்ல… மம்தா பானர்ஜி ஆவேசம்

திரிணாமுல் காங்கிரஸ் போல் பா.ஜ.க. கிடையாது, அது ஒரு மேற்கு வங்க கட்சி அல்ல என்று மம்தா பானர்ஜி என்று தெரிவித்தார்.

கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க. பெங்கால் கட்சி என்று நினைக்காதீர்கள். திரிணாமுல் காங்கிரஸ் ஒரு பெங்கால் கட்சி. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினையில் நீங்கள் பார்க்கவில்லையா? அவர்கள் (பா.ஜ.க.) எதுவும் செய்யவில்லை. நம் செலவில் அவர்களை (புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்) நாம் அழைத்து வந்தோம்.

திரிணாமுல் காங்கிரஸ் போல பா.ஜ.க. கிடையாது… அது ஒரு மேற்குவங்க கட்சி அல்ல… மம்தா பானர்ஜி ஆவேசம்
மம்தா பானர்ஜி

டெல்லி கட்சி டெல்லி மக்களுடனும், குஜராத் மக்களுடன் குஜராத்தும் பிசியாக இருக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வந்த மக்கள் வீட்டுக்கு வருகிறார்கள். எனக்கு தெரியும் அவர்கள் எங்கு தங்குவார்கள் என்று. பெங்காலில் அவர்கள் தங்களது சொந்த மக்களையே அடித்துவிட்டு, திரிணாமுல் காங்கிரஸிடம் கேள்வி கேட்பார்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் போல பா.ஜ.க. கிடையாது… அது ஒரு மேற்குவங்க கட்சி அல்ல… மம்தா பானர்ஜி ஆவேசம்
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.

பா.ஜ.க. எப்போது குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் மக்கள் தொகை பதிவேட்டை எப்போது கொண்டு வரும் என்று தெரியவில்லை. நாங்கள் அவற்றை மேற்கு வங்கத்தில் அனுமதிக்கமாட்டோம். அவர்கள் மேற்கு வங்கத்தை பற்றி அவர்கள் எவ்வாறு சொல்கிறார்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றி தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் ஆம்பன் புயல் சேதத்துக்கு இன்னும் பணம் கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.