உங்களால் சில எம்.எல்.ஏ.க்களை வாங்க முடியும்.. ஆனால் திரிணாமுல் காங்கிரஸை வாங்க முடியாது.. மம்தா பானர்ஜி

 

உங்களால் சில எம்.எல்.ஏ.க்களை வாங்க முடியும்.. ஆனால் திரிணாமுல் காங்கிரஸை வாங்க முடியாது.. மம்தா பானர்ஜி

உங்களால் சில எம்.எல்.ஏ.க்களை வாங்க முடியும் ஆனால் திரிணாமுல் காங்கிரஸை வாங்க முடியாது என்று பா.ஜ.க.வுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்தார்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையிலான போட்டியாக பார்க்கப்படுகிறது. அம்மாநிலத்தில் பா.ஜ.க. விஸ்வரூப வளர்ச்சி கண்டு வருகிறது. திரிணாமுல் காங்கிரசிலிருந்து பல எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. பக்கம் தாவி வருகின்றனர். அண்மையில் மேற்க வங்கத்தில் செல்வாக்கு மிக்க தலைவரான சுவேந்து ஆதிகாரி திரிணாமுல் காங்கிரசிலிருந்து விலகி அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

உங்களால் சில எம்.எல்.ஏ.க்களை வாங்க முடியும்.. ஆனால் திரிணாமுல் காங்கிரஸை வாங்க முடியாது.. மம்தா பானர்ஜி
பா.ஜ.க.

அப்போது, இது தொடக்கம்தான். தேர்தல் வரும்போது நீங்க தனியாகத்தான் இருப்பீங்க என்று மம்தா பானர்ஜியை அமித் ஷா எச்சரிக்கை செய்தார். அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். மேற்குவங்கம் போலாபூரில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: உங்களால் சில எம்.எல்.ஏ.க்களை வாங்க முடியும். ஆனால் திரிணாமுல் காங்கிரஸை வாங்க முடியாது.

உங்களால் சில எம்.எல்.ஏ.க்களை வாங்க முடியும்.. ஆனால் திரிணாமுல் காங்கிரஸை வாங்க முடியாது.. மம்தா பானர்ஜி
திரிணாமுல் காங்கிரஸ்

கட்சியை விட்டு வெளியேறும் சில எம்.எல்.ஏ.க்கள் ஒரு பொருட்டல்ல, மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். ரவீந்தர்நாத் தாகூரின் நிலம் மதசார்ப்பின்மையை வெறுப்பு அரசியல் வெற்றி பெற ஒருபோதும் அனுமதிக்காது. மகாத்மா காந்தி மற்றும் இதர நாட்டின் பிற அடையாளங்களை மதிக்காதவர்கள் சோனார் பெங்களா (கோல்டன் பெங்கால்) உருவாக்கப்போவதாக கூறி வருகின்றனர். ரவீந்திரநாத் தாகூர் ஏற்கனவே பல தசாப்தங்களுக்கு (பத்தாண்டுகளுக்கு) முன்பே சோனார் பங்களாவை உருவாக்கியுள்ளார். நாம் செய்ய வேண்டியது எல்லாம் பா.ஜ.க.வின் மதவாத தாக்குதலிருந்து இந்த நிலத்தை பாதுகாக்க வேண்டும். விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் வகுப்புவாத அரசியலை தொடர முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை காணும்போது நான் மோசமாக உணர்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.