பயப்படாதீங்க…. மேற்கு வங்கம் குஜராத்தாக மாற அனுமதிக்க மாட்டேன்… மம்தா உறுதி

 

பயப்படாதீங்க…. மேற்கு வங்கம் குஜராத்தாக மாற அனுமதிக்க மாட்டேன்… மம்தா உறுதி

மேற்கு வங்கம் குஜராத்தாக மாற அனுமதிக்க மாட்டேன் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் மம்தாவுக்கு கடும் சவாலாக பா.ஜ.க. உள்ளது. அடுத்த ஆண்டு மத்தியில் அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போது மம்தா பானர்ஜி தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் பா.ஜ.க.வை நேரடியாகவோ, மறைமுகமாகவோ கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். கொல்கத்தாவில் சங்கீத் மேளா 2020 என்ற இசை கண்காட்சியை மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது:

பயப்படாதீங்க…. மேற்கு வங்கம் குஜராத்தாக மாற அனுமதிக்க மாட்டேன்… மம்தா உறுதி
திரிணாமுல் காங்கிரஸ்

இசைக்கு எல்லைகள் கிடையாது. பிரிவினைகளில் நம்பிக்கை கொள்ளாதீர்கள் என்று சங்கீத் மேடையில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இசை மேடை ஒருபோதும் பிரிவினையை நம்பாது. அதேபோல் மனித வாழ்க்கையை பிரிக்க முயற்சி செய்தால் அது முடியாது. நமது முகங்கள், சைகைகள் மற்றும் நிறங்கள் மட்டுமே வேறுப்பட்டது ஆனால் நாம் அனைவரும் ஒன்றே. யாரையும் பிரிக்க அனுமதிக்காதீர்கள்.

பயப்படாதீங்க…. மேற்கு வங்கம் குஜராத்தாக மாற அனுமதிக்க மாட்டேன்… மம்தா உறுதி
பா.ஜ.க.

யாராவது ஒருவர் இன்குலாப் சொன்னால், நேதாஜியின் ஜெய் ஹிந்த் சொல்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அனைத்தும் வங்கத்திலிருந்து வந்தவை. நாம் அனைவரும் ஒன்றான ஒரே குடும்பம். இதுதான் மனிதகுலம். அதை பிரிக்க நினைப்பவர்களுக்கு எதிராக கடுமையாக போராடுங்க. பயப்படாதீங்க. நாம் நம் மண்ணை மதிக்க மற்றும் பாதுகாக்க வேண்டும். மேற்கு வங்கத்தை யாராலும் அழிக்க முடியாது. பெங்காலை குஜராத்தாக அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேற்கு வங்க மக்களை பா.ஜ.க. பிரிக்க முயற்சி செய்கிறது என்று மம்தா பானர்ஜி மறைமுகமாக கூறியதாக கூறப்படுகிறது.