பழங்குடி பெண்ணுடன் இணைந்து சமையல் செய்த மம்தா பானர்ஜி…. இது வெறும் நாடகம் என்ற பா.ஜ.க.

 

பழங்குடி பெண்ணுடன் இணைந்து சமையல் செய்த மம்தா பானர்ஜி…. இது வெறும் நாடகம் என்ற பா.ஜ.க.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென ஒரு கிராமத்துக்கு சென்று பழங்குடி பெண்ணுடன் இணைந்து சமையல் செய்தார். ஆனால் இது வெறும் நாடகம் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சில தினங்களுக்கு முன் பிர்பூம் மாவட்டம் போல்பூருக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். கடந்த புதன்கிழமையன்று அங்கியிருந்து கொல்கத்தாவுக்கு திரும்பும் வழியில் திடீரென பயண திட்டத்தை மாற்றி அந்த மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள உணவகத்துக்கு சென்ற மம்தா பானர்ஜி, அங்கு காய்கறிகளை சமைத்து கொண்டு இருந்த ராம பாக்தி என்ற பழங்குடி பெண்ணுடன் இணைந்து காய்கறிகளை சமைத்தார். இது அந்த பழங்குடி மக்களுக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது.

பழங்குடி பெண்ணுடன் இணைந்து சமையல் செய்த மம்தா பானர்ஜி…. இது வெறும் நாடகம் என்ற பா.ஜ.க.
கைலாஷ் விஜயவர்கியா

மம்தா பானர்ஜி அந்த கிராமத்தில் உள்ள பழங்குடியினரின் கோயிலுக்கு சென்று தெய்வத்திடம் பிரார்த்தனை செய்தார். அங்குள்ள மக்களிடம் பேசுகையில், என்னை உங்கள் வீட்டு மகளாக கருதுங்கள். உங்கள் பிரச்சினைகளை பற்றி சொல்லுங்கள். நீங்கள் அரசு முகாமுக்கு வந்திருக்கிறீர்களா? உங்களிடம் பணமில்லா சுகாதார திட்ட அட்டை இருக்கிறதா? என்றெல்லாம் மம்தா விசாரித்தார். மேலும், அங்குள்ள ஒவ்வொரு குடியிருப்புகளிலும் கழிப்பறைகளை கட்டும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பழங்குடி பெண்ணுடன் இணைந்து சமையல் செய்த மம்தா பானர்ஜி…. இது வெறும் நாடகம் என்ற பா.ஜ.க.
பா.ஜ.க.

முதல்வர் மம்தா பானர்ஜியின் திடீரென பழங்குடி கிராமத்துக்கு சென்று அங்குள்ள மக்களிடம் பேசியது குறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், இது ஒன்றுமில்லை ஆனால் நாடகம். இது அவருக்கு எந்த தேர்தல் பலனையும் கொடுக்காது. பழங்குடியினர் மற்றும் வங்கத்தில் உள்ள வாக்காளர்கள் ஏற்கனவே திரிணாமுல் காங்கிரசிலிருந்து வெளியேறி விட்டார்கள் என்று தெரிவித்தார்.