இதெல்லாம் மத்திய பட்ஜெட்டா…. மம்தா பானர்ஜி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம்

இதெல்லாம் மத்திய பட்ஜெட்டா…. மம்தா பானர்ஜி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த 2021-22ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மம்தா பானர்ஜி உள்பட பல்வேறு தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

மத்திய பட்ஜெட் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், மத்திய பட்ஜெட் 2021 விவசாயிகளுக்கு எதிரானது, மக்களுக்கு எதிரானது மற்றும் நாட்டுக்கு எதிரானது. அவர்கள் (பா.ஜ.க. அரசு) எப்போதும் தவறான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். இந்தியாவின் முதல் காகிதமற்ற பட்ஜெட், கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையையும் விற்றது. பட்ஜெட்டில் அமைப்பு சாரா துறைக்கு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

இதெல்லாம் மத்திய பட்ஜெட்டா…. மம்தா பானர்ஜி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம்
சசி தரூர்

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கூறுகையில், தனது வாடிக்கையாளரிடம் உங்க வண்டி பிரேக்கை என்னால் சரி செய்ய முடியாது அதனால் உங்களது வண்டி ஹாரனை சத்தமாக வைத்துள்ளேன் என்ற கேரேஜ் மெக்கானிக்கை பா.ஜ.க. அரசாங்கம் எனக்கு நினைவுப்படுத்துகிறது என்று கிண்டலாக தெரிவித்தார்.

இதெல்லாம் மத்திய பட்ஜெட்டா…. மம்தா பானர்ஜி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம்
ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய பட்ஜெட் பற்றி குறிப்பிடுகையில், முன்எப்போதும் இல்லாத காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட சாதரண பட்ஜெட். தனியார்மயமாக்கல் பாதையில் செல்வதன் மூலம் அரசு தன்னை காப்பாற்றிக் கொள்ள விரும்புகிறது. ஏழைகளுக்கு உதவும் வகையில் பணத்தை பரிமாற்றம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம் ஆனால் அது நிகழவில்லை. பங்கு விற்பனை, தனியாமயமாக்கல் ஆகியவை நாட்டை விற்பனைக்கு வைக்கப்பட வேண்டும் என்று அரசு நினைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.