மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தலைவர் மீது தாக்குதல்… தீவிரமடையும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. மோதல்

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தலைவர் மீது தாக்குதல்… தீவிரமடையும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. மோதல்

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை பா.ஜ.க. அடிக்கடி விமர்சனம் செய்து வருகிறது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும், பா.ஜ.க. தொண்டர்களும் மோதி கொள்ளும் சம்பவங்கள் நடப்பது உண்டு. இந்த சூழ்நிலையில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தன்னை தாக்கியதாக மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலிப் கோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தலைவர் மீது தாக்குதல்… தீவிரமடையும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. மோதல்

இது தொடர்வாக திலிப் கோஷ் கூறுகையில், டீ குடிப்பதற்காக கடைக்கு செல்லும் வழியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் என்னை தாக்கினார்கள். எனது வாகனம் சேதப்படுத்தப்பட்டது மற்றும் பாதுகாவலரும் தாக்கப்பட்டார். திரிணாமுல் காங்கிரஸின் பிரச்சினை என்னவென்று எனக்கு தெரியவில்லை என தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தலைவர் மீது தாக்குதல்… தீவிரமடையும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. மோதல்

கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்டையாக விளங்கிய மேற்கு வங்கத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தனது அதிரடி நடவடிக்கைகளால் கைப்பற்றினார். தற்போது 2வது முறையாக மேற்கு வங்கத்தை மம்தா பானர்ஜி ஆட்சி செய்து வருகிறார். தற்போது மம்தாவுக்கு பெரிய தலைவலியாக பா.ஜ.க. உருவெடுத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 18 தொகுதிகளை கைப்பற்றி மம்தாவுக்கு ஷாக் கொடுத்தது. அடுத்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும்தான் போட்டி என்ற அளவில் உள்ளது.