பா.ஜ.கவுக்கு டப் கொடுக்கும் திரிணாமுல் காங்கிரஸ்.. பா.ஜ.க. பிரபலத்தை தன் பக்கம் இழுத்த மம்தா கட்சி..

பா.ஜ.கவுக்கு டப் கொடுக்கும் திரிணாமுல் காங்கிரஸ்.. பா.ஜ.க. பிரபலத்தை தன் பக்கம் இழுத்த மம்தா கட்சி..

பா.ஜ.க.வின் பிரபல தலைவர் உஷா சவுத்ரி நேற்று அந்த கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இம்மாதம் 27ம் தேதி தொடங்கி மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. தற்போது அந்த மாநிலத்தில் பா.ஜ.க. புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. சமீபகாலமாக அந்த கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருவதால் பிற கட்சிகளை சேர்ந்த குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் பா.ஜ.க.வுக்கு தாவினர்.

பா.ஜ.கவுக்கு டப் கொடுக்கும் திரிணாமுல் காங்கிரஸ்.. பா.ஜ.க. பிரபலத்தை தன் பக்கம் இழுத்த மம்தா கட்சி..
பா.ஜ.க.

இதற்கு பதிலடியாக திரிணாமுல் காங்கிரசும் பா.ஜ.க.வினரை தங்கள் கட்சிக்குள் இழுத்து வருகின்றனர். நேற்று பா.ஜ.க.வில் பிரபலமாக விளங்கிய உஷா சவுத்ரி அந்த கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். இது பா.ஜ.க.வினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரை மேலும் 3 பிரபலங்கள் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர்.

பா.ஜ.கவுக்கு டப் கொடுக்கும் திரிணாமுல் காங்கிரஸ்.. பா.ஜ.க. பிரபலத்தை தன் பக்கம் இழுத்த மம்தா கட்சி..
திரிணாமுல் காங்கிரஸ்

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், பிரபல பாடகியும், நார்த் 24 பர்கானாஸ் திரிணாமுல் இளைஞர் காங்கிரஸ் தலைவர் டெப்ராஜ் சக்ரவர்த்தியின் மனைவியுமான அதிதி முன்ஷி, அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சவுகதா ராய் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். பாடகி அதிதி முன்ஷி திரிணாமுல் காங்கிரசில் இணைவதற்கு முன்னதாக, நடிகரும், இயக்குருமான தீராஜ் பண்டிட் மற்றும் நடிகை சுபத்ரா முகர்ஜி ஆகியோர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர்.