மம்தா கட்சியில் நான் மீண்டும் சேரப்போகிறேனா?.. எனது அரசியல் பாதையில் உறுதியாக இருக்கிறேன்.. முகுல் ராய்

மம்தா கட்சியில் நான் மீண்டும் சேரப்போகிறேனா?.. எனது அரசியல் பாதையில் உறுதியாக இருக்கிறேன்.. முகுல் ராய்

பா.ஜ.க.விலிருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் சேரபோவதாக வெளியான வதந்திகளை முகுல் ராய் மறுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. முகுல் ராய் கலந்து கொள்ளவில்லை. இதனையடுத்து முகுல் ராய் மீண்டும் தனது தாய் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கு செல்ல உள்ளதாக வதந்தி தீயாக பரவ தொடங்கியது.

மம்தா கட்சியில் நான் மீண்டும் சேரப்போகிறேனா?.. எனது அரசியல் பாதையில் உறுதியாக இருக்கிறேன்.. முகுல் ராய்
பா.ஜ.க.

இதனையடுத்து முகுல் ராய் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இது தொடர்பாக முகுல் ராய் டிவிட்டரில், மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க பா.ஜ.க.வின் வீரனாக எனது போராட்டம் தொடரும். உங்களது படைப்புகள் மற்றும் அனுமானங்களையும் ஓய்வெடுக்குமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். எனது அரசியல் பாதையில் நான் உறுதியாக இருக்கிறேன் என பதிவு செய்து இருந்தார்.

மம்தா கட்சியில் நான் மீண்டும் சேரப்போகிறேனா?.. எனது அரசியல் பாதையில் உறுதியாக இருக்கிறேன்.. முகுல் ராய்
மம்தா பானர்ஜி

இந்த அறிக்கை பாராட்டத்தக்கது என்று முகுல் ராயை பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பாராட்டினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பேசுகையில், அண்மையில் முடிவடைந்த சட்டப்பேரவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து பொதுமக்களின் ஆணையை ஏற்க பா.ஜ.க. தயாராக இல்லை. பா.ஜ.க. போலி செய்திகளை பரப்புகிறது என்று குற்றம் சாட்டினார்.