மோடி, அமித் ஷா, நட்டா கூட்டங்கள், ரத யாத்திரை, நேதாஜி விழா… மேற்கு வங்கத்தை கலக்க பா.ஜ.க. திட்டம்

மோடி,  அமித் ஷா, நட்டா கூட்டங்கள், ரத யாத்திரை, நேதாஜி விழா… மேற்கு வங்கத்தை கலக்க பா.ஜ.க. திட்டம்

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு முன்பாக மோடி, யோகி ஆதித்யநாத் கூட்டங்கள், ரத யாத்திரை மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் என பல அதிரடி திட்டங்களை செயல்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்னதாக மேற்கு வங்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் ஆகியோர் அடிக்கடி கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மாநில பா.ஜ.க மத்திய தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மோடி,  அமித் ஷா, நட்டா கூட்டங்கள், ரத யாத்திரை, நேதாஜி விழா… மேற்கு வங்கத்தை கலக்க பா.ஜ.க. திட்டம்
பா.ஜ.க.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழாவை கொண்டாட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அந்த விழாவில் பிரதமர் மோடியை பங்கேற்க செய்து பிரமாண்டமாக கொண்டாட அந்த கட்சி திட்டமிட்டுள்ளது. அம்மாநிலத்தில் ஒரு ரத யாத்திரை நடத்தவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. 2019ம் ஆண்டில் ஒரு ரத யாத்திரை நடத்த பா.ஜ.க. முயற்சி செய்தது. ஆனால் அது முடியாமல் போனது.

மோடி,  அமித் ஷா, நட்டா கூட்டங்கள், ரத யாத்திரை, நேதாஜி விழா… மேற்கு வங்கத்தை கலக்க பா.ஜ.க. திட்டம்
திரிணாமுல் காங்கிரஸ்

ஆனால் இந்த முறை மாநிலத்தில் உள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ரத யாத்திரை நடத்த பா.ஜ.க. விரும்புகிறது. இருப்பினும் யாத்திரை குறித்த இறுதி முடிவை கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே இந்த மாதம் பல்வேறு கட்சிகளை சேர்ந்த குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைவார்கள் என்று சொல்லப்படுகிறது.