மேற்கு வங்க தேர்தலில் அமைதியோ அமைதி… ஆச்சர்யமடைந்த தேர்தல் ஆணையம்!

 

மேற்கு வங்க தேர்தலில் அமைதியோ அமைதி… ஆச்சர்யமடைந்த தேர்தல் ஆணையம்!

மேற்கு வங்க மாநிலத்தில் 294 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நான்கு கட்ட வாக்குப்பதிவுகளும் பயங்கர மோதல், வன்முறைச் சம்பவங்களுடன் நடந்தன. குறிப்பாக கடந்த கட்ட வாக்குப்பதிவில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி நான்கு திருணாமுல் கட்சி தொண்டர்களை சுட்டுக்கொன்றனர். இது மேற்கு வங்க அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேற்கு வங்க தேர்தலில் அமைதியோ அமைதி… ஆச்சர்யமடைந்த தேர்தல் ஆணையம்!

மோதலுக்குக் காரணம் பாஜக, திருணாமுல் கட்சித் தலைவர்களான மோடி, அமித் ஷா, மம்தா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. உச்சக்கட்டமாக மம்தா பானர்ஜிக்கும் பாஜக தலைவர் ராகுல் சின்ஹாவுக்கும் பிரச்சாரம் செய்ய தடைவிதித்தது தேர்தல் ஆணையம். இதை எதிர்த்து மம்தா தர்ணாவில் ஈடுபட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு 6 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க தேர்தலில் அமைதியோ அமைதி… ஆச்சர்யமடைந்த தேர்தல் ஆணையம்!

மொத்தமாக 45 தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். குறிப்பாக திருணாமுல் கட்சி அமைச்சர்களான கவுதம் தேவ், பிரத்யா பாஸு ஆகியோரும், பாஜக சார்பில் ஜெகன்நாத் சர்கார், சாமிக் பட்டாச்சார்யா ஆகியோரும் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். 4 மணி நிலவரப்படி 69.40 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.