பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் – அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

 

பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் – அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படுமென அமைச்சர் சாமிநாதன் சட்டபேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 13ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் முதலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதமும் கொள்கை விளக்கக் குறிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், மக்களுக்காக பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் – அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

இன்று காலை கூடிய அவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் கீழ் அரசு ஊழியர்களுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும். சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும். போராட்ட வழக்குகள் வாபஸ் செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் சாமிநாதன், பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். பணியின் போது உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். மேலும், இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க நிதியுதவி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.