“முதல்வர் 6 அறிவிப்புக்கு வரவேற்பு” முத்தரசன் நெகிழ்ச்சி!

 

“முதல்வர் 6 அறிவிப்புக்கு வரவேற்பு” முத்தரசன் நெகிழ்ச்சி!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 6 முக்கிய அறிவிப்புகளுக்கு முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

“முதல்வர் 6 அறிவிப்புக்கு வரவேற்பு” முத்தரசன் நெகிழ்ச்சி!

தென் சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் 250 கோடி செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம், தமிழ் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் இலக்கிய மாமணி விருது, உயர் விருதுகள் பெற்ற தமிழக எழுத்தாளர்களுக்கு அரசு சார்பில் வீடு, திருவாரூர் மாவட்டத்தில் சேமிப்பு கிடங்குகள் , நகரப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கும் திருநங்கைகளுக்கும் , இலவச பேருந்து பயணம் என பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

“முதல்வர் 6 அறிவிப்புக்கு வரவேற்பு” முத்தரசன் நெகிழ்ச்சி!

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “முன்னாள் முதலமைச்சர், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளில், தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தும் முக்கியமானவைகள். கலைஞரின் நினைவாக மதுரையில் நவீன நூலகம் அமைப்பது, தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘இலக்கிய மாமணி’ விருது வழங்குவது, சாகித்திய அகாதெமி மற்றும் ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு அரசு வீடுகள் வழங்கும் திட்டம், கிங் ஆய்வு மைய வளாகத்தில் 500 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுதல், திருவாரூர் மாவட்டத்தில்
16 ஆயிரம் டன் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் சூரிய மின் ஆற்றல் வசதி கொண்ட உலர் களங்கள், நகரப் பேருந்துகளில் உழைக்கும் பெண்களுக்கு அறிவித்த இலவச பயணத்தை திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவு படுத்துதல் போன்ற அனைத்தும் சமூக முன்னேற்றத்திற்கு பயனுள்ள பங்களிப்பாகும். குறிப்பாக படைப்புலகில் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும், புதிய படைப்புகைளை உருவாக்கும். கலைஞர் பிறந்த நாளில் முதலமைச்சர் அறிவித்த திட்டங்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது” என்று கூறியுள்ளார்.