ஒலிம்பிக்கில் பதக்க வேட்டையை தொடங்கியது இந்தியா ; பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி வென்றார்!

ஒலிம்பிக்கில் பதக்க வேட்டையை தொடங்கியது இந்தியா ; பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி வென்றார்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்க வேட்டையை தொடங்கியது இந்தியா ; பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி வென்றார்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நேற்று கோலாகலமாகத் தொடங்கியது ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில், 205 நாடுகளில் இருந்து 11,300 பேர் கலந்து கொண்டுள்ளனர். ஹாக்கி, துப்பாக்கிச் சுடுதல்,டேபிள் டென்னிஸ் , பளுதூக்குதல், வில்வித்தை உள்ளிட்ட பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடரில் வெள்ளியுடன் பலத்த போட்டி தொடங்கியது இந்தியா.மகளிர் பளுதூக்குதலில் 49 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி வென்றார். ஸ்னாட்ச் ,கிளீன் &ஜெர்க் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வரலாறு படைத்தார்.

ஒலிம்பிக்கில் பதக்க வேட்டையை தொடங்கியது இந்தியா ; பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி வென்றார்!

ஒலிம்பிக் வரலாற்றில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. 2000 சிட்னி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில் மீராபாய் வெள்ளி வென்றுள்ளார்.பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீரா பாய் சானுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.210 கிலோ எடையை தூக்கி சீன வீரர் ஹோ சி ஹூய் தங்க பதக்கத்தை தட்டி சென்ற நிலையில் அடுத்த இடத்தை மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு பெற்றார்.