கண்டபடி எடை கூட இதுவும் ஒரு காரணமாம்-கண்டுபிடிக்க லேப்க்கு கிளம்புங்க

 

கண்டபடி எடை கூட இதுவும் ஒரு காரணமாம்-கண்டுபிடிக்க லேப்க்கு கிளம்புங்க

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அயோடின் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. நம் உடலில் தைராய்டு சுரப்பியை தூண்டுவதற்கு அயோடின் தாது அவசியமாகும். தைராய்டை தூண்டக்கூடிய ஹார்மோனை அதிகப்படுத்தும் இயல்பு அயோடினுக்கு உண்டு.  உப்பு, மீன், பால் பொருள்கள், முட்டை ஆகியவை அயோடின் சத்து உடலில் சேருவதற்கு உதவும்

கண்டபடி எடை கூட இதுவும் ஒரு காரணமாம்-கண்டுபிடிக்க லேப்க்கு கிளம்புங்க

தைராய்டு செயல்பாடு குறைந்தால்,  உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவில் மாற்றம் போன்ற பாதிப்புகள்  ஏற்படலாம். ஆகவே, தைராய்டு பிரச்னையை சரி செய்வதற்கு உணவு கட்டுப்பாடுகளை கண்டிப்பாக மேற் கொள்ள  வேண்டும். தைராய்டு கோளாறை கண்டுபிடிக்க தாமதமானால் அதற்குள் உடல் எடை அதிகரித்துவிடும்.

சரியான ஊட்டச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதுடன், உடற்பயிற்சிகளும் செய்யும்போது, குறைபாட்டுக்காக தரப்படும் மருந்துகளோடு அவை இணைந்து துரிதமான குணம் கிடைக்க உதவும். வாழ்க்கை முறையில் செய்யும் மாற்றத்தால் தைராய்டு பிரச்னை மேலும் தீவிரமடையாமல் கட்டுக்குள் இருந்தால், எடையை குறைப்பது எளிதாகும்.

 ஒழுங்காக உடற்பயிற்சி செய்வது, போதிய நீர் அருந்துவது, சாப்பாட்டு அளவை குறைத்துக்கொள்வது ஆகியவை தைராய்டு பிரச்னையை கட்டுப்படுத்த உதவும். தைராய்டை கட்டுப்படுத்தினால் உடல் எடை தானாகவே குறையும் .