• February
    19
    Wednesday

Main Area

Main



என்னது இந்த ஊறுகாய் சாப்பிட்டால் எடை குறையுமா?

ஊறுகாய்
ஊறுகாய்

உணவுகளில் மிகவும் பிரதானமானது ஊறுகாய். ஊறுகாய் இல்லாமல் சிலருக்கு உணவு சாப்பிடப் பிடிக்காது. ஆனால் ஊறுகாய் என்றாலே எண்ணெய், காரம் என்பதால் சிலர் அதை சாப்பிடப் பயப்படுகிறார்கள். அதனால் எண்ணெய் இல்லாத, கலோரிகள் குறைவான பச்சை மிளகாய் ஊறுகாய் குறித்து தெரிந்து கொள்ளலாம். 

pickle

பச்சை மிளகாயில் நீர்ச்சத்து அதிகம் என்பதால்  அதில் கலோரிகள் குறைவாக இருக்கும். அதனால் அதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை  குறைய வாய்ப்புள்ளது. அதில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிகலை போக்கி செரிமானத்தையும் சீராக்குகிறது.  பச்சை மிளகாயில் கேப்சைசின் இருப்பதால் சளி, இருமலை உண்டாக்கும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

chilli

கடுகு எண்ணெய், புளி, வினிகர், பச்சை மிளகாய் போன்றவை சேர்த்து  ஒரு பாட்டிலில் போட்டு  ஊறவைத்து பின்பு தாளித்து ஊறுகாயாகச்  சாப்பிட  அதன் சுவையே அலாதி தான்.  

குறிப்பாக  எதுவாக இருந்தாலும் அதை குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறந்து விடாதீர்கள். 

2018 TopTamilNews. All rights reserved.