• August
    20
    Tuesday

Main Area

Main



இந்த வாரம் பங்கு வர்த்தகம் கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும்- பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு...

பங்குச் சந்தை நிலவரம்
பங்குச் சந்தை நிலவரம்
Loading...

தொடர்ந்து பல வாரங்களாக பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு அடி  மேல் அடி விழுந்து கொண்டே இருக்கிறது. அதனால் இந்த வாரமாவது பங்குச் சந்தை தங்களை காப்பாற்றுமா என்ற ஏக்கத்தில் முதலீட்டாளர்கள் உள்ளனர். ஆனால் இந்த வார வர்த்தகம் கொஞ்சம் இப்படி அப்படி தான் இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பங்கு வர்த்தகம்

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இது சர்வதேச பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலிக்கும். அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டை தொடர்ந்து திரும்ப பெற்று வருகின்றனர். இது இந்திய பங்குச் சந்தைகளுக்கு பாதமான அம்சமாகும்.

இந்தியன் ஹோட்டல்ஸ், டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல், மகிந்திரா அண்டு மகிந்திரா, இந்தியா சிமெண்ட்ஸ், எச்.சி.எல். மற்றும் கெயில் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் இந்த வாரம் தங்களது ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட உள்ளன. அதன் முடிவுகளை பொறுத்து இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும்.

பங்குச் சந்தை

அடுத்த வாரம் நடைபெற ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டி குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது சந்தைக்கு நல்ல செய்தியாகும். இதுதவிர, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, உள்நாட்டு முதலீட்டாளர்கள் நிலைப்பாடு போன்றவையும் இந்திய பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கததை நிர்ணயம் செய்யும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.