ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி, தேவகோட்டையில் களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம்!

 

ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி, தேவகோட்டையில் களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம்!

சிவகங்கை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் நேற்று மாட்டு வண்டி பந்தயம் விமரிசையாக நடைபெற்றது.

பெரியமாடு, சின்னமாடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், சிவகங்கை, புதுகோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாட்டங்களில் இருந்து பெரியமாடு பிரிவில் 15 வண்டிகளும், சின்ன மாட்டில் 25 வண்டிகளும் பங்குபெற்றன. அதிமுக முன்னாள் எம்.பி., செந்தில் நாதன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி, தேவகோட்டையில் களைகட்டிய மாட்டுவண்டி பந்தயம்!

இதனையொட்டி, கண்ணங்கோட்டை – காரைக்குடி சாலையில் மாட்டு வண்டிகளில் வீரர்கள் சீறிப்பாய்ந்து சென்றனர். போட்டியை சாலையின் இருபுறமும் சூழ்ந்து நின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். சுமார் 7 மைல் தொலைவு தூரம் நடந்த பெரியமாட்டு வண்டி போட்டியில் நகரம்பட்டியை சேர்ந்த கண்ணன் முதலிடமும், தானவயலை சேர்ந்த வெங்கடாசலம் இரண்டாம் இடமும் பிடித்தனர்.

இதேபோல், 5 மைல் தொலைவிற்கு நடந்த சின்னமாட்டு வண்டி பிரிவில், கல்லல் பகுதியை சேர்ந்த சிங்கமுத்து என்பவரும், நல்லாங்குடியை சேர்ந்த முத்தையா ஆகியோர் முதல் 2 இடங்களை பிடித்தனர். போட்டியில் வென்றவர்களுக்கு அதிமுக சார்பில் ரொக்கப்பரிசு, வெள்ளிப்பாத்திரங்கள் மற்றும் சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டது.