தஞ்சை திருக்கானூர்பட்டியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி!

 

தஞ்சை திருக்கானூர்பட்டியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி!

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600-க்கும் மேற்பட்ட காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவையொட்டி, இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மேலும், காளைகளை அடக்க 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை திருக்கானூர்பட்டியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி!

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் கோவிந்தா ராவ், கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து வாடிவாசலில் இருந்து முதல் காளையாக கோவில் காளை திறந்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து, மற்ற காளைகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டது. களத்தில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை இளைஞர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். மேலும், சில காளைகள் இளைஞர்களை அச்சுறுத்தி சீறிப்பாய்ந்து சென்னறன.

இந்த போட்டியை தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். போட்டியில் வென்ற இளைஞர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம், வெள்ளிப்பொருட்கள், கட்டில், பீரோ உள்ளிட்டோர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.