தஞ்சை நாஞ்சிகோட்டையில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி!

 

தஞ்சை நாஞ்சிகோட்டையில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி!

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டையில் சிவராத்திரியை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தஞ்சை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 650-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன.

இதேபோல், காளைகளை அடக்க 450-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் தங்களது பெயரை முன்திவு செய்துள்ளனர்.போட்டியை தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு தஞ்சை கோட்டாட்சியர் வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தஞ்சை நாஞ்சிகோட்டையில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி!

அதனை தொடர், வாடிவாசலில் இருந்து காளைகள் திறக்கப்பட்டு வருகின்றன. அவற்றை இளைஞர்கள் தீரத்துடன் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். போட்டியில் வென்ற காளைகள் மற்றும் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, பரசு வழங்குபவர்களின் பெயர்களையும் அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.