கொரோனாவால் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா!

 

கொரோனாவால் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா!

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ஆம் நேரலை குறிக்கிறது. இந்த நாளில் நல்ல மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும். அந்த சமயம் மக்கள் நதிகளை வணங்கி புனித நீராடுவார்கள் . ஆடி 18 அன்று செயல்கள் பல்கிப் பெருகும் என்பது ஐதீகம். அந்த நாளில் விரதமிருந்து இறைவனை வழங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

கொரோனாவால் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா!

அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஆடிப்பெருக்கின் போது காவிரி கரையோர பகுதியில் புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு புதிதாக தாலி மாற்றி கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் பொருட்டு முக்கிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதுடன் காவிரி ஆற்றங்கரையில் மக்கள் ஒன்றுகூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரம் , ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவானைக்காவல் , மலைக்கோட்டை, உறையூர் வெக்காளி ,வயலூர் முருகன் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் பூஜைகள் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா!

இந்நிலையில் காவிரி கரையில் நீராட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் ஆடி18 விழா காவிரிக் கரையோரங்களில் களை இழந்து காணப்படுகிறது. சேலம், திருச்சி, தஞ்சை ,நாகை, கரூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மதுரை வைகை ஆற்றங்கரையில் புதுமணத்தம்பதிகள் ஆடி பதினெட்டு கொண்டாடி வருகின்றனர்.