தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!!

 

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!!

காற்றின் வேகமாறுபாட்டின் காரணமாக 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!!

தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்தில்இருந்தே வெயில் மண்டையை பிளக்கிறது. இதனால் வயதானவர்கள் குடைகளை கையில் எடுத்து செல்லுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதேசமயம் இளநீர், தர்பூசணி போன்ற கோடை வெயிலில் அதிகம் விரும்பப்படும் பொருட்களின் விற்பனையும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த சூழலில் காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக நெல்லை ,தென்காசி ,ராமநாதபுரம், தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் .ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை பெய்யும்!!

நாளை முதல் 28ஆம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி ,தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யும் . அதே போல் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை ஏற்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . அத்துடன் வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை
ஒட்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மழை அளவு கன்னியாகுமரி மைலாடியில் இரண்டு சென்டி மீட்டரும் , நாகர்கோவிலில் ஒரு சென்டி மீட்டரும் பதிவாகியுள்ளது.