பிற்பகலில் கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பலத்த மழைக்கு வாய்ப்பு!

பிற்பகலில் கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பலத்த மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகலில் கரையை கடக்கிறது.

ஒடிசா அருகே நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம் மேற்கு வங்கம் – வங்கதேசம் இடையே கரையைக் கடக்க உள்ளது. இதன் காரணமாக ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் வரும் இருநாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிற்பகலில் கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பலத்த மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிலவரப்படி மேற்குவங்கம் – வங்கதேச பகுதியில் வட மேற்கே நிலை கொண்டுள்ளது. இது இன்று மேலும் நகர்ந்து சுந்தர வனக் காடுகள் அருகே இன்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற்பகலில் கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் : பலத்த மழைக்கு வாய்ப்பு!

இதனால் அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் இன்று பலத்த மழை பெய்ய கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதனிடையே இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் பரவலாக நேற்று மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் நேற்றுமாலை பெய்த கனமழையில் வாகனங்கள் நீரில் தத்தளித்தபடி சென்றன.