2 நாட்களுக்கு கனமழை…இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

 

2 நாட்களுக்கு கனமழை…இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 நாட்களுக்கு கனமழை…இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் ,வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு , கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் , கன்னியாகுமரி மாவட்டங்களில் பொதுவாக மேகமூட்டத்துடன் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

2 நாட்களுக்கு கனமழை…இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

வருகின்ற 24ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி ,கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ,தென்காசி மாவட்டங்கள் ,வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். வருகின்ற 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

2 நாட்களுக்கு கனமழை…இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

வட மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 26-ஆம் தேதி வரை தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதி ,மேற்கு வங்க கடல், மத்திய வங்கக் கடல் ,கர்நாடகா, கேரளா ,லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் , தென்மேற்கு அரபிக் கடல் , அரபிக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் ,இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசப்படும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.