சீன தலைநகரில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லையாமே!

 

சீன தலைநகரில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லையாமே!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 31 லட்சத்து  17 ஆயிரத்து 813 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. 12 நாட்களுக்குள் 31 லட்சம் அதிகரித்து விட்டது.

கொரோனா வைரஸின் தொடக்கம் கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் இருந்துதான் தொடங்கியது. உலகிற்கு இந்த நோய் கிருமியைப் பரப்பிவிட்டது சீனாதான் என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றசாட்டைச் சொல்லிவருகிறது.

சீன தலைநகரில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லையாமே!

இந்நிலையில் சீன தலைநகர் பெய்ஜிங்கில் பொதுவெளியில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்று அரசு அறிவித்திருக்கிறது. எப்படி ஆனது இந்த மாற்றம்.

சீனாவின் வூகான் நகரிலிருந்து தன் கொடூர பயணத்தைத் தொடங்கியது கொரொனா வைரஸ். அதன் தாக்குதலில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்டவையே அஞ்சி நடுங்கின.

சீனாவில் தொடங்கினாலும் விரைவில் நிலைமை அங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மீண்டும் பலருக்கு அங்கு கொரோனா நோய்த் தொற்று பரவினாலும் உடனே தனிமைப்படுத்தல், சிகிச்சை என தீவிர கன்காணிப்பில் கொரோனா கட்டுக்குள் நிறுத்தபட்டது.

சீன தலைநகரில் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லையாமே!

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் கொரோனா நோய்த்தொற்று அதிகம் இருந்தது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 935 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளானார்கள். அவர்களில் 924 பேர் சிகிச்சையின் பலனாக குணமடைந்தனர். 9 பேர் இறந்தனர்.

இப்போது பெய்ஜிங்கில் நிலைமை கட்டுக்குள் இருப்பதால் பொதுவெளியில் செல்பவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆயினும் எவரையேனும் சந்திக்கச் சென்றால் அங்கே மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சில நடத்தை விதிகளை அறிவுறுத்தியுள்ளது அரசு.