“ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தால் செல்லமாட்டோம்” அதிமுக எம்எல்ஏ அன்பழகன்

 

“ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தால் செல்லமாட்டோம்” அதிமுக எம்எல்ஏ அன்பழகன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. புதுச்சேரியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சியின் பெரும்பான்மை இழந்தது.

“ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தால் செல்லமாட்டோம்” அதிமுக எம்எல்ஏ அன்பழகன்

இதையடுத்து நேற்று புதுச்சேரி சட்டப்பேரவை கூடிய நிலையில் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க தவறியது. இதனால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பறிபோனது. இதை தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். துணைநிலை ஆளுநர் தமிழிசை முதல்வர் நாராயணசாமியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு விட்டால் பெரும்பான்மையுள்ள எதிர்கட்சிகளை ஆட்சியமைக்க அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தால் செல்லமாட்டோம்” அதிமுக எம்எல்ஏ அன்பழகன்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ அன்பழகன், “புதுச்சேரியில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தால் செல்லமாட்டோம் என்று அதிமுக எம்எல்ஏ அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் குறுக்கு வழியில் ஆட்சியமைக்க அதிமுக முயற்சிக்காது என்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததற்கு அதிமுக காரணமல்ல; நாராயணசாமி தான் காரணம் என்றார்.தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் தேதிகள் 10 நாட்களில் மட்டுமே அறிவிக்கப்படும் என்பதால் இப்போது அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. நாங்கள் தேர்தல்களை எதிர்கொண்டு ஜனநாயக வழியில் அரசாங்கத்தை அமைப்போம் என்றும் தெரிவித்தார்.