’கொரோனா தடுப்பூசியைக் கட்டாயப்படுத்த மாட்டோம்’ சொல்வது எந்த நாட்டின் பிரதமர் தெரியுமா?

 

’கொரோனா தடுப்பூசியைக் கட்டாயப்படுத்த மாட்டோம்’ சொல்வது எந்த நாட்டின் பிரதமர் தெரியுமா?

கொரோனாவின் கோரப்பிடிக்குள் உலகமே சிக்கித் தவிக்கிறது. பல நாடுகளில் இரண்டாம், மூன்றால் அலை கொரோனா வீச்சுகள் பரவு மக்களைக் கதி கலங்க வைத்து வருகிறது. கொரோனாவினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்த வண்ண்ணமே உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 7 லட்சத்து  20 ஆயிரத்து 501 பேர். இன்றைய காலைவரை, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 20 லட்சத்து 31ஆயிரத்து 578 நபர்கள்.

’கொரோனா தடுப்பூசியைக் கட்டாயப்படுத்த மாட்டோம்’ சொல்வது எந்த நாட்டின் பிரதமர் தெரியுமா?

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 02 ஆயிரத்து 028 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,72,62,089 பேர்.

உலகமே கொரோனாவிற்கான தடுப்பூசி எப்போது வரு என ஆவலோடு காத்திருக்கிறது. பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி இலவசம் என தேர்தல் வாக்குறுதி கொடுக்கிறார்கள். ஆனால், ஒரு நாட்டின் பிரதமர், தங்கள் நாட்டு மக்களை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப் படுத்த மாட்டோம் எனக் கூறியிருக்கிறார்.

’கொரோனா தடுப்பூசியைக் கட்டாயப்படுத்த மாட்டோம்’ சொல்வது எந்த நாட்டின் பிரதமர் தெரியுமா?

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். ஆனால், அவர் அளித்திருந்த ஒரு பேட்டியில், “கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்ள மக்களைக் கட்டாயப்படுத்த மாட்டோம். அடுத்த ஆண்டு ஈஸ்டருக்குள் கொரோனா தடுப்பூசி வந்துவிடும். அதன்பிறகு பொருளாதாரமும் சீராகும்’என்று தெரிவித்திருக்கிறார்.

எல்லோருமே கொரோனா தடுப்பூசிக்குக் காத்திருந்தாலும் பரிசோதனை அடிப்படையில் எனும்போது பலரும் ஓடி ஒளிந்தார்கள். அதன் அடிப்படையில் இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் பேசியிருக்கலாம் என்று விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.