darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



அடி மேல் அடி வாங்கினாலும் நாங்க ஒடி போக மாட்டோம்! வோடாபோன் உறுதி

 வோடாபோன்
வோடாபோன்

காலத்தின் கட்டாயத்தின் காரணமாக இங்கிலாந்தின் வோடாபோன் நிறுவனம் தனது இந்திய தொலைத்தொடர்பு பிரிவை ஐடியா நிறுவனத்துடன் இணைத்தது. இதனையடுத்து வோடாபோன் ஐடியா கூட்டு வர்த்தக நிறுவனம் பிறந்தது. நிறுவனங்களை இணைத்த பிறகாவது தொழில் நல்லா இருக்கும் என்ற நினைத்த வோடாபோன் நிறுவனத்துக்கு கடும் ஏமாற்றம்தான். வோடாபோன் ஐடியா நிறுவனம் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்தது. 

வோடாபோன் ஐடியா

இந்த சூழ்நிலையில், சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் தொடர்பான வழக்கில், ஏர்டெல், வோடாபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறைக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1 லட்சம் கோடி செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் வோடாபோன் ஐடியா நிறுவனம் மட்டும் சுமார் ரூ.40 ஆயிரம் கோடி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

ஏற்கனவே தொழில் நிலவரம் சரியில்லை, இந்நிலையில் மேலும் ரூ.40 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும் என்பதால் வோடாபோன் நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு சந்தையிலிருந்து வெளியேற போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதனை பிரிட்டிஷ் நிறுவனமான வோடாபோன் மறுத்துள்ளது.

உச்ச நீதிமன்றம் 

இது குறித்து வோடாபோன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சந்தையிலிருந்து நாங்கள் வெளியேற போவதாக சில ஊடகங்களில் ஆதாரமற்ற செய்திகள் வந்ததை நாங்கள் அறிந்தோம். ஆனால் அது உண்மையில்லை மற்றும் தவறான செய்தியாகும். அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம் மற்றும் இந்த கஷ்டமான நேரத்தில் எங்களது கூட்டு வர்த்தகத்தை நிர்வகிப்பதில் உள்ளூர் (இந்தியா) நிர்வாகத்துக்கு முழு ஆதரவு கொடுப்போம். என அதில் தெரிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.