’இந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி வேண்டாம்’ பிரேசில் அதிபர் சொல்வது எந்த நாட்டை?

’இந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி வேண்டாம்’ பிரேசில் அதிபர் சொல்வது எந்த நாட்டை?

உலக நாடுகள் அனைத்துக்குமே கொரோனாவின் பாதிப்பு இருக்கிறது. ஆயினும், அதிக மரணங்களை எதிர்கொண்டு வரும் நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது பிரேசில் நாடு.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 4 கோடியே 14 லட்சத்து 87 ஆயிரத்து 185 பேர்.

’இந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி வேண்டாம்’ பிரேசில் அதிபர் சொல்வது எந்த நாட்டை?

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 11 லட்சத்து 36 ஆயிரத்து 341 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 3 கோடியே 9 லட்சத்து 14 ஆயிரத்து 158 நபர்கள்.

பிரேசிலின் மொத்த பாதிப்பு 53,00,649 பேர். இவர்களில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 47,56,489 பேர். சிகிச்சை பலன் அளிக்காது மரணம் அடைந்தவர்கள் 1,55,459 பேர்.

’இந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி வேண்டாம்’ பிரேசில் அதிபர் சொல்வது எந்த நாட்டை?

இவ்வளவு பாதிப்புகளைக் கொண்ட பிரேசிலுக்கு கொரோனா தடுப்பூசி உடனடியாகத் தேவை. ஆனால், இன்னமும் எந்த நாட்டிலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் அளவு ஆய்வு முடிவுகள் இறுதியாக வில்லை.

இந்நிலையில் சமூக ஊடகத்தில் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளித்த பிரேசில் அதிபர் பொல்சனாரூ, ‘சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்தை வாங்க மாட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்.