‘டிசம்பருக்குள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்போம்’ நம்பிக்கையுடன் சொல்லும் நாடு இதுதான்!

‘டிசம்பருக்குள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்போம்’ நம்பிக்கையுடன் சொல்லும் நாடு இதுதான்!

கொரோனா பேரலை உலகையே சுருட்டி, பேரவஸ்தைக்குள் தள்ளியுள்ளது. ஒவ்வொரு நாடும் எப்படி இப்பேரிடரிலிருந்து தற்காத்துக்கொள்வது எனக் குழம்பி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 57 லட்சத்து 01 ஆயிரத்து 674 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 68 லட்சத்து 70 ஆயிரத்து 533 நபர்கள்.

‘டிசம்பருக்குள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்போம்’ நம்பிக்கையுடன் சொல்லும் நாடு இதுதான்!

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 45 ஆயிரத்து 953 பேர்.

இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பு மருந்து மட்டுமே தீர்வு என்றாகி விட்டது. எனவே, பல நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்து கண்டறிவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

யுனைடெட் கிங்டம் எனப்படும் பிரிட்டனில் கொரோனா மொத்த பாதிப்பு 515,571. இவர்களில் இறந்தவர்கள் 42,369 பேர்.

‘டிசம்பருக்குள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்போம்’ நம்பிக்கையுடன் சொல்லும் நாடு இதுதான்!

பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரோனா நோய்த் தொற்றால் தீவிர சிகிச்சை அளிக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் பல நாள் சிகிச்சைக்குப் பிறகே இயல்பு நிலைக்குத் திரும்பினார். உலகிலேயே ஒரு நாட்டின் பிரதமர் கொரோனா தொற்றுக்குள்ளானதில் இவரே முதல் நபர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் தற்போது அறிவிப்பில் இந்த ஆண்டின் டிசம்பருக்குள் பிரிட்டனில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றூ தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் முழு வீச்சில் நடக்கின்றன. ஆய்வு இறுதி கட்டத்தை நெருங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.