’’15 தினங்களுக்கு மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடும்’’- அமைச்சர் கருப்பண்ணன்

’’15 தினங்களுக்கு மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடும்’’- அமைச்சர் கருப்பண்ணன்

பவானியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே சி கருப்பண்ணன் கலந்துகொண்டு 8.63 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்

’’15 தினங்களுக்கு மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடும்’’- அமைச்சர் கருப்பண்ணன்

ஈரோடு மாவட்ட பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி. கருப்பண்ணன் கலந்துகொண்டார்.

’’15 தினங்களுக்கு மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடும்’’- அமைச்சர் கருப்பண்ணன்

விழாவில் முதியோர் உதவித்தொகை நகர நிலவரித்திட்ட தோராயப்பட்டா வீட்டுமனை ஒப்படைப்பு, மின்னணு குடும்ப அட்டை என 429 பயனாளிகளுக்கு 8.63 கோடி ரூபாய் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

’’15 தினங்களுக்கு மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடும்’’- அமைச்சர் கருப்பண்ணன்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஏழை எளிய மக்களின் அத்தியாவசியத் தேவை மற்றும் அடிப்படை தேவைகள் என்னவென்று உணர்ந்து அதற்கான திட்டங்களை முதலமைச்சர் உருவாக்கி மக்களுக்கு வழங்கி வருகின்றார் எனவும், கொரோனா பரவாமல் இருக்க சமூக இடைவெளியில் பின்பற்றுவதுடன் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் . இந்நோய் தொற்று ஏற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் மேலும் 15 தினங்களுக்கு மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடும். எனவே அரசு கூறும் அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் கடைபிடித்து நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

’’15 தினங்களுக்கு மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடும்’’- அமைச்சர் கருப்பண்ணன்
’’15 தினங்களுக்கு மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடும்’’- அமைச்சர் கருப்பண்ணன்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், கோபி கோட்டாட்சியர் ஜெயராமன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

’’15 தினங்களுக்கு மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடும்’’- அமைச்சர் கருப்பண்ணன்