“இன்னைக்கு வெளிய போறோம்; ஸ்டாலின் ஜெயிச்சா தான் சட்டமன்றத்துக்குள்ள வருவோம்” – துரைமுருகன் சபதம்!

“இன்னைக்கு வெளிய போறோம்; ஸ்டாலின் ஜெயிச்சா தான் சட்டமன்றத்துக்குள்ள வருவோம்” – துரைமுருகன் சபதம்!

தமிழக தேர்தல் நெருங்கிவருவதால் நடப்பாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்யவரும்போது துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கத்தி கூச்சல் போட்டனர். தாங்கள் அரசு மீது கூறவரும் கருத்துகளைக் கேட்டுவிட்டு பட்ஜெட் தாக்கல் செய்யுங்கள் என்பதே துரைமுருகன் தரப்பு வாதம். ஆனால், சபாநாயகர் தனபால் அவரைப் பேச அனுமதிக்கவில்லை. இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தது. இதனையடுத்து துரைமுருகன் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் பட்ஜெட் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

“இன்னைக்கு வெளிய போறோம்; ஸ்டாலின் ஜெயிச்சா தான் சட்டமன்றத்துக்குள்ள வருவோம்” – துரைமுருகன் சபதம்!

வெளிநடப்பு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சியிலிருந்து இறங்கும்போது தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடியாகத்தான் இருந்தது. இன்றைக்கு எடுத்த எடுப்பிலேயே கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் நிதியமைச்சர் எங்கள் ஆட்சியின் கடன் ரூ.5.70 லட்சம் கோடி என்று சொல்கிறாரென்றால், ஆட்சி செய்ய அருகதையற்ற அரசு இது என்பதற்கு வேறு சான்று தேவையில்லை. நாங்கள் சபையில் சொல்லிவிட்டு வந்தோம். தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் நீர்மூலமாக்கிய ஆட்சிதான் இந்த ஆட்சி.

“இன்னைக்கு வெளிய போறோம்; ஸ்டாலின் ஜெயிச்சா தான் சட்டமன்றத்துக்குள்ள வருவோம்” – துரைமுருகன் சபதம்!

கடன் வாங்கி மக்களுக்கு நன்மை செய்யவில்லை, டெண்டர் விட்டு பினாமிகளுக்குச் சலுகைகள் செய்து கொடுத்துள்ளார்கள். கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு நேரடியாகப் பண உதவி செய்யாமல் தேர்தல் நேரத்தில் சுயநலத்தால் பணம் கொடுக்கிறது பழனிசாமி அரசு. தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டு காலம் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டார்கள். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நிதிநிலை மேலாண்மையில் ஏற்பட்டுள்ள அனைத்து முறைகேடுகளையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். நிதி நிலைமை வேகமாகச் சீரமைக்க்கப்படும்.

“இன்னைக்கு வெளிய போறோம்; ஸ்டாலின் ஜெயிச்சா தான் சட்டமன்றத்துக்குள்ள வருவோம்” – துரைமுருகன் சபதம்!

புதுவையில் நடந்த நிகழ்வு ஜனநாயகத்தை எந்த வகையிலும் பாஜக கொலை செய்யும் என்பதற்கு உதாரணம். இன்று திமுக கூட்டத் தொடரிலிருந்து வெளிநடப்பு செய்கிறது. திமுக மகத்தான வெற்றி பெற்றபின் நாங்கள் மீண்டும் இந்த சபைக்குத் திரும்புவோம்”என்றார்.