“விஜய் சொல்லுக்கு கட்டுப்படுவோம்”- ஆலோசனை கூட்டத்தில் முடிவு!

 

“விஜய் சொல்லுக்கு கட்டுப்படுவோம்”- ஆலோசனை கூட்டத்தில் முடிவு!

விஜய் கட்சி தொடங்கினால், அவர் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்படுவோம் என திண்டுக்கல் மாவட்ட விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல் நகரில், தளபதி விஜய் இளைஞர் அணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

“விஜய் சொல்லுக்கு கட்டுப்படுவோம்”- ஆலோசனை கூட்டத்தில் முடிவு!

மாவட்ட இளைஞரணி தலைவர் தர்மா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் விஜய் அரசியல் கட்சி, இயக்க செயல்பாடுகள் குறித்து பொய்யான தகவல்களை வெளியிடுவோருக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

“விஜய் சொல்லுக்கு கட்டுப்படுவோம்”- ஆலோசனை கூட்டத்தில் முடிவு!

எந்த சூழ்நிலையிலும் ரசிகர்கள் என்கிற பெயரில் விஜய்க்கும், விஜய் மக்கள் இயக்கத்தின் பெயருக்கும் களங்கம் விளைவிக்கக் மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தளபதி விஜயின் கட்டளைக்கு மட்டுமே மக்கள் இயக்க ரசிகர்கள் கட்டுப்பட்டு செயல்படுவோம் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.

இதுதொடர்பாக தர்மா பேசுகையில், தளபதி கட்சி ஆரம்பித்தால் மட்டுமே அதில் இணைந்து செயல்படுவோம். தளபதி விஜய்யின் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்பட்டு ரசிகர்கள் செயல்படுமோம் என் உறுதியாக தெரிவித்தார்.