தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றவே ஆட்சிக்கு வர விரும்புகிறோம்! – டாக்டர் ராமதாஸ் விளக்கம்

 

தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றவே ஆட்சிக்கு வர விரும்புகிறோம்! – டாக்டர் ராமதாஸ் விளக்கம்

தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றவே பா.ம.க ஆட்சிக்கு வர வேண்டும் நினைக்கிறோம் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க-வின் 32வது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி கட்சியினருக்கு ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றவே ஆட்சிக்கு வர விரும்புகிறோம்! – டாக்டர் ராமதாஸ் விளக்கம்
“சென்னை மெரினா கடற்கரையின் சீரணி அரங்கத்தில் மக்கள் கடலின் நடுவே 1989-ஆம் ஆண்டு ஜூலை 16ம் தேதி தொடங்கப்பட்ட சமூக ஜனநாயக இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி, வரும் 16-ஆம் தேதி 31 ஆண்டுகளை நிறைவு செய்து 32-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியை விடவும் துடிப்பான, பொறுப்பான அரசியல் கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான். அந்த பெருமைக்கு காரணம் சந்தேகமே இல்லாமல் நீங்கள் தான்.
பாட்டாளி மக்கள் கட்சியின் ஆண்டு விழாக்கள் எனப்படுபவை வழக்கமான ஆண்டு விழாக்களைப் போல அல்ல. ஒவ்வொரு ஆண்டு விழாவுமே பாட்டாளி மக்கள் கட்சியின் கடந்த ஓராண்டு கால செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து, தணிக்கை செய்யும் நிகழ்வாகவே அமைகின்றன. அவ்வாறு தணிக்கை செய்யும் போது ஒவ்வொரு ஆண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலையில் சூட்டப்படும் மக்கள் பணி என்ற கிரீடத்தில், புதிய சாதனைகள் எனப்படும் வைரக்கற்கள் பதிக்கப்படுவது என்பது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றவே ஆட்சிக்கு வர விரும்புகிறோம்! – டாக்டர் ராமதாஸ் விளக்கம்

அது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர்ச்சியான வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் 31-ஆவது ஆண்டு விழாவை, மக்களவைத் தேர்தலில் பொய்களால் விளைந்த தோல்வியின் பின்னணியில் கொண்டாடினோம். தோல்விகளைக் கண்டு துவளாமல் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று உறுதியேற்றுக் கொண்டோம்.
உழவர்கள் முதல் மாணவர்கள் வரை, மகளிர் முதல் மருத்துவர்கள் வரை அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளையும் நாம் நிறைவேற்றி வைத்திருந்தாலும் கூட, அதற்காக நாம் நடத்திய போராட்டங்கள் மிகவும் அதிகம். ஏராளமான போராட்டங்களை நடத்தியும் கூட முழுமையான மதுவிலக்கு, அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி, உழவர்களுக்கு அனைத்து இடு பொருட்களையும் இலவசமாக வழங்குவதுடன், அவர்களின் விளைபொருட்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலைகளை நிர்ணயிப்பது, தமிழ்நாட்டை, மற்ற மாநிலங்களின் தயவை எதிர்பார்த்துக் காத்திருக்காத அளவுக்கு பாசனத் திட்டங்களை செயல்படுத்தி, தண்ணீரில் தன்னிறைவு பெற்ற பூமியாக மாற்றுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை.

தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றவே ஆட்சிக்கு வர விரும்புகிறோம்! – டாக்டர் ராமதாஸ் விளக்கம்இத்தகைய மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால், ஆட்சி என்ற அதிசய திறவுகோல் நமக்குத் தேவை. அதற்காக மட்டும் தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நினைக்கிறது.
ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் நாம் தோல்விகளைத் தான் சந்தித்து வருகிறோம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்; நமது தவறுகளும் கூட அப்படி ஒரு நிலைமையை ஏற்படுத்தியிருக்கலாம். அவற்றிலிருந்து கற்ற அனுபவங்களில் இருந்து தான் புதிய திட்டங்களை வகுத்து நாம் செயல்படத் தொடங்கினோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை ஆகியவற்றை அமைத்து, அவற்றை அன்புமணி மக்கள் படையாக மாற்றுவதற்கான நமது பயணம் வேகமடைந்த நேரத்தில் தான் கொடிய கொரோனா வைரஸ் பரவல் அனைத்துக்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டது. எனக்கு இன்னும் சில நாட்களில் 81 வயது நிறைவடையப் போகிறது. ஆனாலும், எனது எண்ணங்கள் அனைத்தும் எப்போது பாட்டாளி சொந்தங்களைச் சந்திப்போம்; இயக்கப்பணிகளை எப்போது முழுவீச்சில் தொடங்கி இலக்கை அடைவோம் என்பதாகவே உள்ளன. எனக்கே அவ்வளவு துடிப்பு இருந்தால், இளைஞர் கூட்டம் நிறைந்த பாட்டாளி சொந்தங்கள் எவ்வளவு துடிப்பாக இருப்பீர்கள்? என்பதை எனது மனத்திரையில் காட்சிகளாக்கி உணர்ந்து கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டும் தான் உள்ளன. ஆனால், நாம் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகளோ ஏராளமாக உள்ளன. அனைத்துக்கும் முட்டுக்கட்டையாக இருப்பது கொரோனா வைரஸ் பரவல் அச்சம் தான். அந்த அச்சம் தணிந்தவுடன், ஓட்டப்பந்தயத்தில் ஓடி முதலிடம் பிடிப்பதற்காக, போட்டி தொடங்குவதை அறிவிக்கும் துப்பாக்கி சுடும் ஓசை எப்போது கேட்கும் என்று காத்திருக்கும் தடகள வீரர்களைப் போல, நமது செயல்வீரர்களாகிய பாட்டாளி சிங்கங்கள் களப்பணியாற்றுவதற்காக காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
உங்களை நேரில் சந்திக்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம்; அதற்கு முன்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் 32ஆவது ஆண்டு விழாவையொட்டி வரும் 16ம் தேதி இணைய வழியாக நடைபெறும் ஆண்டு விழா சிறப்பு செயற்குழு கூட்டத்தில் உங்களையெல்லாம் சந்திக்கவும், எதிர்காலத் திட்டங்கள் குறித்து உரையாடவும் காத்திருக்கிறேன். இணையத்தில் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.