• 16
    ஞாயிறு
  • 01
    மார்கழி

Main Area

Main

மி டூ பெண்களுக்கு எதிராக களமிறங்கிய வி டூ ஆண்கள்: குவியும் பாலியல் குற்றச்சாட்டுகள்!

wetoo

சென்னை: மி டூ இயக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வி டூ என்ற இயக்கத்தை ஆண்கள் தொடங்கியுள்ளனர்.

பெண்களுக்குத் தனிமையில் நேர்ந்த பாலியல் தொல்லைகளைப் பொதுவெளியில் பகிர ‘Me too’ என்ற இயக்கம் ஹேஸ்டேக்காக தொடங்கப்பட்டது. அந்த ஹேஸ்டேக் மூலம் பல முக்கிய பிரபலங்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் தொடங்கி தமிழ் திரையுலகம் வரை புயலை வீசி வரும் அந்த ஹேஸ்டேக்கிற்கு எதிராகவும், ஆதரவாகவும் பல நடிகர், நடிகைகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த, வி டூ என்ற ஹேஸ்டேக் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களில் பிரபலமாகி வரும் அந்த ஹேஸ்டேக் மூலம், தற்போது வரை 1600 பேர் தங்களுக்கு பெண்களால் நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பதிவிட்டுள்ளனர். 

             
2018 TopTamilNews. All rights reserved.