darbar
  • January
    19
    Sunday

Main Area

Main



நாங்க ஆதரவும் கொடுப்போம்! முட்டுக்கட்டையும் போடுவோம்.....குடியுரிமை மசோதாவுக்கு செக் வைத்த உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

நாடாளுமன்ற மக்களவையில் நேற்றுமுன்தினம் குடியுரிமை (திருத்த) மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முன்னதாக திங்கட்கிழமை காலையில் வெளியான சிவ சேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாமனாவில், குடியுரிமை (திருத்த) மசோதா கண்ணுக்கு தெரியாத பிரிவினைவாதத்துக்கு வழிவகுக்கும் என அந்த கட்சி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது. ஆனால் நாடாளுமன்ற மக்களவையில் அன்று சிவ சேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் குடியுரிமை (திருத்த) மசோதாவுக்கு ஆதரவு அளித்தார்.

சிவ சேனா

குடியுரிமை (திருத்த) மசோதாவை இன்று மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்கிறது. மக்களவையில்  ஆதரவு அளித்த சிவ சேனா தற்போது மசோதா தொடர்பான எங்க கேள்விகளுக்கு பதில் கிடைத்தால்தான்  மாநிலங்களவையில் ஆதரவு கொடுப்போம் என திடீரென முரண்டு பிடித்துள்ளது. சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே இது குறித்து கூறியதாவது:

குடியுரிமை மசோதாவுக்கு சில மாநிலங்கள் எதிர்ப்பு

அந்த அகதிகள் எங்கு.... எந்த மாநிலத்தில் தங்குவார்கள் என்பது உள்பட மக்களவையில் குடியுரிமை (திருத்த) மசோதா தொடர்பாக நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் கிடைத்தால் மட்டுமே மாநிலங்களவையில் மசோதாவுக்கு ஆதரவு அளிப்போம். இந்த மசோதா தொடர்பான விரிவான ஆலோசனை மற்றும் விவாதம் அவசியம். மசோதாக்களை நிறைவேற்றுவதை காட்டிலும், பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை மற்றும் வாழ்வின செலவின அதிகரித்து வருவது குறிப்பாக வெங்காய விலை உயர்வு ஆகியவற்றை குறித்து மோடி அரசு கவலைப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.