“நாம லைட்டா அசந்தாலும் கொரோனா நம்மள பொலி போட்ரும்” – எச்சரிக்கும் மத்திய அரசு!

 

“நாம லைட்டா அசந்தாலும் கொரோனா நம்மள பொலி போட்ரும்” – எச்சரிக்கும் மத்திய அரசு!

கொரோனா இரண்டாம் அலையின்போது இந்தியா கண்ட கொடூரத்தை நம்மில் எவராலும் மறக்க முடியாது. அந்தளவிற்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றது. மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து கத்திய அவலக்குரல்கள் இன்னும் நாம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை விட மிக முக்கியமாக பொருளாதார ரீதியில் அனைவருக்கும் பலத்த அடி விழுந்திருக்கிறது. இந்தப் பேரழிவிலிருந்து மீள்வதற்கு குறைந்தது இரண்டு வருடங்களாவது ஆகலாம்.

“நாம லைட்டா அசந்தாலும் கொரோனா நம்மள பொலி போட்ரும்” – எச்சரிக்கும் மத்திய அரசு!

தற்போது இந்தியாவில் பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்துள்ளது. பெருமளவு குறைந்துவிட்டதால் லாக்டவுன் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் 75% இடங்கள் முழுமையாக திறக்கப்பட்டுவிட்டன. பெயரளவுக்கே ஊரடங்கு என்ற ஒன்று உள்ளது. மற்றபடி மக்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பி பல நாட்களாகிவிட்டன. முந்தைய கஷ்டங்களிலிருந்து மக்கள் படிப்பினைகளைப் பெற்றதாய் தெரியவில்லை. யாரும் சரியாகக் கூட மாஸ்க் அணிவதில்லை. முறையாக சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில்லை.

“நாம லைட்டா அசந்தாலும் கொரோனா நம்மள பொலி போட்ரும்” – எச்சரிக்கும் மத்திய அரசு!

விவகாரம் இப்படி சென்று கொண்டிருக்க மத்திய, மாநில அரசுகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றுங்கள் என காட்டு கத்து கத்துகின்றன. ஆனால் நம்மாட்கள் எதற்கும் செவி மடுக்காமல் மூன்றாம் அலைக்கான வித்தை ஊன்றி வருகிறார்கள். இச்சூழலில் புது குண்டு ஒன்றை தூக்கி போட்டிருக்கிறார் நிதி ஆயோக்கின் சுகாதாரத் துறைக்கான உறுப்பினர் விகே பால். நிருபர்களிடம் பேசிய அவர், “கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போர் நிறைவடைய இன்னும் வெகு தொலைவு இருக்கிறது.

“நாம லைட்டா அசந்தாலும் கொரோனா நம்மள பொலி போட்ரும்” – எச்சரிக்கும் மத்திய அரசு!

நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம் இது. நாம் சோர்வடைந்தாலும், கொரோனா வைரஸ் சோர்வடைய போவதில்லை. எந்தவொரு தடுப்பூசிக்கும் 100% கேரண்டி கொடுக்க முடியாது. ஒவ்வொரு தடுப்பூசியும் அதனதன் வீரியத்திற்கேற்ப மக்களை உயிரிழப்பிலிருந்து காப்பாற்றும். உண்மை நிலவரம் என்னவென்றால் வைரஸ்கள் உருமாறிக் கொண்டிருக்கின்றன. இது சிக்கலானது. பெரிய விழாக்களை கொண்டாடும் நேரம் இதுவல்ல. தேவையற்ற பயணத்தை தவிருங்கள்” என்றார்.