“மக்களின் சூழ்நிலைக்கு ஏற்பவே திட்டங்களை செயல்படுத்துகிறோம்” – முதலமைச்சர் பேச்சு

 

“மக்களின் சூழ்நிலைக்கு ஏற்பவே திட்டங்களை செயல்படுத்துகிறோம்” – முதலமைச்சர் பேச்சு

ஈரோடு

தேர்தலில் வாக்குகளை வாங்குவதற்காக எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை என்றும், மக்களின் சூழ்நிலை ஏற்பவே திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் இடையே உரையாற்றினார். அப்போது, ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தின் மூலம் ஈரோடு பகுதி மக்களுக்கு இன்னும் 10 நாட்களில பாதுகாக்கப்பட்ட காவிரி நீர் வழங்கப்படும் என்றும், அந்த திட்டத்தை தானே தொடங்கி வைப்பேன் என்றும் தெரிவித்தார். மேலும், சாயக்கழிவு நீர் பிரச்சினைக்கு, மத்திய அரசுடன் இணைந்து தீர்வு காணப்படும் என்றும் உறுதி அளித்தார்.

“மக்களின் சூழ்நிலைக்கு ஏற்பவே திட்டங்களை செயல்படுத்துகிறோம்” – முதலமைச்சர் பேச்சு

ஈரோட்டில் இருந்து சித்தோட்டிற்கு நான்கு வழிச்சாலை கொண்டுவரப்படும் என்று கூறிய முதலமைச்சர்,. இவ்வளவு திட்டங்களை செய்தும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சியில் ஒரு திட்டமும் நடைபெறவில்லை என்று பொய்யாக குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், திமுக நிர்வாகி சாப்பிட்ட உணவுக்கு காசு கேட்ட கடை உரிமையாளரை மிரட்டி வழக்குப்பதிவு செய்ய விடாமல் தடுப்பதாகவும், கட்டபஞ்சாயத்து செய்யும் கட்சி திமுக என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

“மக்களின் சூழ்நிலைக்கு ஏற்பவே திட்டங்களை செயல்படுத்துகிறோம்” – முதலமைச்சர் பேச்சு

மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அதனை அதிமுக அரசு தான் வழங்கும் என்ற முதலமைச்சர், அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 வழங்கி உள்ளதாகவும், கொரோனா காலத்தில் 8 மாதங்களாக ரேஷன் கடைகளில் 40 கிலோ அரிசி பருப்பு சர்க்கரை வழங்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், தேர்தலில் வாக்குகளை வாங்க எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை என கூறிய அவர், மக்களின் சூழ்நிலை ஏற்ப தான் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.