இந்தியாவை எதிரியாக மாற்ற எந்த காரணமும் இல்லை… ஆனால் சீனா ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது.. சீன ஊடகம் தகவல்

இந்தியாவை எதிரியாக மாற்ற எந்த காரணமும் இல்லை… ஆனால் சீனா ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது.. சீன ஊடகம் தகவல்

எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் இந்தியா தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இது சீனாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் சீன ராணுவ வீரர்கள் இந்திய வீரர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். மேலும் இரு நாடுகளும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் படைகளை குவித்து வருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதனையடுத்து இரு நாடுகளும் பதற்றத்தை தணிக்க இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து அதன்படி நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தியாவை எதிரியாக மாற்ற எந்த காரணமும் இல்லை… ஆனால் சீனா ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது.. சீன ஊடகம் தகவல்

இதற்கிடையே சீனாவில் வெளியாகும் குளோபல் டைம்ஸில் வெளியான தலையங்கத்தில், தெற்காசிய எல்லை மோதலில் தலையிடுவதற்காக அமெரிக்காவையும், அதன் தலைமையையும் கடுமையாக சாடியுள்ளது. அந்த தலையங்கத்தில், இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள இந்தியாவை அமெரிக்கா ஏமாற்றக்கூடாது. வாஷிங்டன் நாடுகளுக்கு இடையே ஒரு பிளவை ஏற்படுத்துவதிலும், நாடுகளை தன் பக்கம் இழுப்பதிலும் ஆர்வமாக உள்ளது. இது மற்ற நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களை வழங்குவதற்கு பதிலாக சீனா மீதான மூலோபாய அழுத்தத்திற்கு உதவுகிறது.

இந்தியாவை எதிரியாக மாற்ற எந்த காரணமும் இல்லை… ஆனால் சீனா ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுக்கொடுக்காது.. சீன ஊடகம் தகவல்

பெய்ஜிங்கிற்கு எதிரான புதுடெல்லியின் மோதலை ஊக்குவிப்பதற்கும், புதிய எல்லை மோதல்களை ஊக்குவிப்பதற்கும் சீனா மற்றும் இந்தியா இடையே மோதல் ஏற்படும் ஒவ்வொரு முறையும் அமெரிக்கா இந்தியாவை ஆதரிக்கிறது. இந்தியாவை தவறாக பார்க்க சீனா விரும்பவில்லை. நல்ல அண்டை உறவுகள் பல தசாப்தங்களாக சீனாவின் அடிப்படை தேசியக் கொள்கையாக உள்ளது. மேலும் எல்லை பிரச்சினைகளை தீர்க்கும் விதத்தில் இந்த கொள்கையை சீனா உறுதியாக கடைப்பிடிக்கிறது. இந்தியாவை எங்கள் எதிரியாக மாற்ற எங்களுக்கு எந்த காரணமும் இல்லை. ஆனால் சீனா எந்தவொரு அங்குல நிலப்பரப்பையும் விட்டுக் கொடுக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.