’இத்தனை ஆயிரம் விடுதலைப் புலிகளைக் கொன்றோம்’ சரத் பொன்சேகா அதிர்ச்சி தகவல்

 

’இத்தனை ஆயிரம் விடுதலைப் புலிகளைக் கொன்றோம்’ சரத் பொன்சேகா அதிர்ச்சி தகவல்

இலங்கையில் கணிசமான மக்கள் தொகை கொண்டவர்கள் தமிழர்கள். அந்த நாட்டையே பூர்விகமாகக் கொண்டவர்கள். ஆனால், இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக விடுதலைக்கு முன்பே போரட்டம் நடத்தப்பட்டது.

அது தந்தை செல்வா தலைமையில் ஜனநாயக ரீதியில் நடந்தது. 1980 -களுக்குப் பிறகு, தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கவும் தனி நாடு கோரியும் பல ஆயுதக் குழுக்கள் தோன்றின. அவற்றில் முக்கியமானது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு.

’இத்தனை ஆயிரம் விடுதலைப் புலிகளைக் கொன்றோம்’ சரத் பொன்சேகா அதிர்ச்சி தகவல்

இலங்கை ராணுவத்துடன் அவ்வப்போது போரிட்டு, ஒரு குறிப்பிட்ட பகுதியை தம் வசமாக்கியது. 2002 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் அமைதி நிலவியது. ஆனால், 2008 ஆம் ஆண்டு தொடங்கி 2009 -மே மாதம் வரை இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தம் நடைபெற்றது.

இறுதியுத்தத்தில் சுமார் 1.5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக தமிழர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், அரசு தரப்பில் 40 ஆயிரம் என்று கூறப்பட்டிருந்தது. அந்த யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும் இலங்கை ராணுவ தரப்பில் அறிவிக்கப்பட்டது.

’இத்தனை ஆயிரம் விடுதலைப் புலிகளைக் கொன்றோம்’ சரத் பொன்சேகா அதிர்ச்சி தகவல்

நேற்று இலங்கை பாராளுமன்றத்தில் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா அதிர வைக்கும் தகவலைக் கூறியுள்ளார். “இறுதி யுத்தத்தில் 23 ஆயிரம் விடுதலைப் புலிகளைக் கொன்றோம். சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகளை புணர்வாழ்வுக்கு அனுப்பினோம். பொதுமக்கள் எனில் பார்க்கையில் சுமார் 5 ஆயிரம் பேர் இறந்திருப்பார்கள். விடுதலைப் புலிகள் பொதுமக்களையும் போரில் கட்டாயப் படுத்தி ஈடுபட வைத்தார்கள்” என்பதாகக் கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

சரத் பொன்சேகா தற்போது இலங்கையின் எதிர்கட்சியாக இருக்கிறார். அவர் கூறியிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.